Tuesday 30 December 2008

தமிழா ,நீ பேசுவது தமிழா ?

தமிழா!நீ பேசுவது தமிழா?
தமிழா!நீ பேசுவது தமிழா?


அன்னையைத் தமிழ்வாயால்'மம்மி' என்றழைத்தாய்...
அழகுக் குழந்தையை'பேபி' என்றழைத்தாய்...
என்னடா, தந்தையை 'டாடி' என்றழைத்தாய்...
இன்னுயிர்த் தமிழைகொன்று தொலைத்தாய்...


தமிழா!நீபேசுவது தமிழா?


உறவை 'லவ்' என்றாய்உதவாத சேர்க்கை...
'ஒய்ப்' என்றாய் மனைவியைபார் உன்றன் போக்கை...
இரவை 'நைட்' என்றாய்விடியாதுன்வாழ்க்கை
இனிப்பை 'ஸ்வீட்' என்றாய்அறுத்தெறி நாக்கை...


தமிழா!நீ பேசுவது தமிழா?


வண்டிக்காரன் கேட்டான்'லெப்ட்டா? ரைட்டா?
'வழக்கறிஞன் கேட்டான்என்ன தம்பி 'பைட்டா?
'துண்டுக்காரன் கேட்டான்கூட்டம் 'லேட்டா?
'தொலையாதா தமிழ் இப்படிக் கேட்டா?


தமிழா!நீ பேசுவது தமிழா?


கொண்ட நண்பனை'பிரண்டு' என்பதா?
கோலத் தமிழ்மொழியைஆங்கிலம் தின்பதா?
கண்டவனை எல்லாம்'சார்' என்று சொல்வதா?
கண்முன் உன் தாய்மொழிசாவது நல்லதா?


தமிழா!நீ பேசுவது தமிழா?


பாட்டன் கையில'வாக்கிங் ஸ்டிக்கா
'பாட்டி உதட்டுலஎன்ன 'லிப்ஸ்டிக்கா?
'வீட்டில பெண்ணின்தலையில் 'ரிப்பனா?
'வெள்ளைக்காரன்தான்உனக்கு அப்பனா?


தமிழா!நீ பேசுவது தமிழா?


-உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன்


7 comments:

Expatguru said...

அருமையான வார்த்தைகள், அழகான கருத்துக்கள்.

நட்புடன் ஜமால் said...
This comment has been removed by the author.
நட்புடன் ஜமால் said...

சாட்டையடி வார்த்தைகள் ...

ஆழமான கருத்துகள்
அழகான வரிகள்

பூங்குழலி said...

இந்த அற்புதமான கவிதையின் வரிகளை எனக்கு கொடுத்து உதவிய ,அன்புடன் குழும நண்பர் "காதல் ராஜா"வுக்கு நன்றி

சு.பரணி கண்ணன் said...

All advices are given to others not for us right? which language is அக்க்ஷரா ? You must belog to DMK.

shanevel said...

நா எப்பவோ படிச்ச கவிதைதான் என்றாலும் இப்ப படிச்சாலும் தமிழுணர்வை கிளிர்ச்சியுறும் உணர்ச்சியை ஏற்படுத்தும் கவிதைகளுள் இதுவும் ஒன்று..!

ஈழக்கதிர் தி said...

அம்மா அப்பா அக்க்ஷரா?
தமிழா!நீ பேசுவது தமிழா?
தமிழா!நீ சூட்டுவது தமிழ்ப் பெயரா?