Tuesday 7 April 2009

பிறந்தநாள்

நேற்று வழக்கமாக காய் வாங்கும் சூர்யா கிரீன்ஸ் கடைக்கு சென்றிருந்தேன் .இதே வளாகத்துக்குள்ளே இசைக் கல்லூரியும் உண்டு .
நேற்று ஒரு இளைஞர் பட்டாளம் வெளியே நின்று கொண்டு காரை இங்கே நிறுத்த வேண்டாம் என்று ஒரு பக்கம் சுவரை ஒட்டிய இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது .


காய் வாங்கிக் கொண்டிருக்கையில் ஒரு இருபது பேர் அளவிலான ஒரு கூட்டம் கூடியது .இதில் பல பெண்களும் அடக்கம் .அவர்கள் வகுப்பு தோழன் போலும் ,ஒரு இளைஞனை அழைத்து வந்தார்கள் .கைகள் இரண்டையும் பின்னால் கட்டினார்கள் .இவனை சுவரோரம் நிற்க வைத்து அவன் மேல் உஜாலா சொட்டு நீலம்,சாஸ் ,முட்டை,பீர் என மாறி மாறி எதை எதையோ ஊற்றிக் கொண்டே இருந்தார்கள் .அவன் வாயிலும் மூக்கிலும் போய் திக்கு முக்காடிக் கொண்டிருந்தான் .

இதில் ஒரு பெண் கடையினுள் வந்த போது ,ஒருவர் கேட்டார் ,"என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் ? அந்த பையன் திணறிக் கொண்டிருக்கிறான் ".அந்த பெண் சாவகாசமாக பதில் சொன்னாள் ,"இன்று அவன் பிறந்தநாள் ,அதைத் தான் கொண்டாடுகிறோம் ."போன வாரம் ஒரு பிறந்த நாளுக்கு ,ஐந்து கிலோ கேக்கை வாங்கி பிறந்தநாள் கொண்டாடுபவன் மேல் கொட்டினார்களாம் ."இது லோ பட்ஜெட் கொண்டாட்டம் " என்றாள் .

இவர்கள் எல்லோரும் இசை கல்லூரி மாணவர்களாம் .

இசை என்பது மெல்லிய உணர்விலானது .மெல்லிய உணர்வுகளை தூண்டக் கூடியது என்றெல்லாம் கதைகள் எழுதுகிறோம் .அங்கோ, இவர்கள் கூச்சலிலும் ஆரவாரத்திலும் அந்த இடமே அல்லோகலப் பட்டுக்கொண்டிருந்தது.

கொண்டாட்டம் கூடாதென்பதில்லை ஆனால் ,எல்லாவற்றிற்கும் சில வரையறைகள் உண்டு அல்லவா ?


1 comment:

ஆ.சுதா said...

//இதில் ஒரு பெண் கடையினுள் வந்த போது ,ஒருவர் கேட்டார் ,"என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் ? அந்த பையன் திணறிக் கொண்டிருக்கிறான் ".அந்த பெண் சாவகாசமாக பதில் சொன்னாள் ,"இன்று அவன் பிறந்தநாள் ,அதைத் தான் கொண்டாடுகிறோம் ."போன வாரம் ஒரு பிறந்த நாளுக்கு ,ஐந்து கிலோ கேக்கை வாங்கி பிறந்தநாள் கொண்டாடுபவன் மேல் கொட்டினார்களாம் ."இது லோ பட்ஜெட் கொண்டாட்டம் " என்றாள் .//

உண்மைதான் இப்ப கொண்டாடங்கள் கலாச்சார சீரழிவைகூட செய்கின்றது



//இசை என்பது மெல்லிய உணர்விலானது .மெல்லிய உணர்வுகளை தூண்டக் கூடியது என்றெல்லாம் கதைகள் எழுதுகிறோம் .அங்கோ, இவர்கள் கூச்சலிலும் ஆரவாரத்திலும் அந்த இடமே அல்லோகலப் பட்டுக்கொண்டிருந்தது.//

அக்கரையான பதிவு