Monday 1 June 2009

விடை தெரியாத கேள்விகள்



இன்று ஒரு இளம் பெண்ணை அழைத்து வந்தார்கள் .வயது பத்தொன்பது .எச்.ஐ.வி நோய்க்கான மருந்துகளை சில வருடங்களாகவே எடுத்துக் கொண்டிருக்கிறாள் .நோய் இருப்பது தெரியுமா என்பது எவருக்கும் தெரியவில்லை .இதை கேட்கவும் தெரியப்படுத்தவும் எவருக்கும் துணிவில்லை .

சிறு குழந்தையாய் இருந்த போது ,ஏதோ அவசர தேவைக்காக தந்தையின் ரத்தத்தை ஏற்றியிருக்கிறார்கள் ,தந்தைக்கு நோய் இருப்பது தெரியாமல் .
அதனால் ,இந்த பெண் பாதிக்கப்பட்டிருக்கிறாள் .

இது போல் இன்று பல இளைஞர்கள் இருக்கிறார்கள் .கர்ப்பத்தில் தாயிடமிருந்தோ ,இப்படி ரத்தம் மூலமாகவோ நோயால் பாதிக்கப்பட்டவர்கள் .
இவர்கள் எதிர்காலம் இவர்களின் குடும்பத்தினரை பயமுறுத்திக் கொண்டே இருக்கிறது .

நோயைப் பற்றி எப்படி சொல்வது ?
எவர் சொல்வது ?
சொன்னால் பிள்ளையால் தாங்க முடியுமா ?
நம்மீது வெறுப்பு தோன்றுமா ?
திருமணம் செய்யலாமா?
செய்யாமல் இருந்தால் சுற்றத்தாரின் கேள்விகளுக்கு எவர் பதில் சொல்வது?

இப்படி நோயுடன் மட்டுமல்ல ,விடை தெரியாத கேள்விகளுடனும் பல பெற்றோர்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர் .


3 comments:

வனம் said...

வணக்கம்

இதுநாள்வரை உங்கள் பதிவுகள் படிப்பேன் ஆனால் பின்னூட்டியதில்லை.

இதில் தோன்றியது

உங்களின் எல்லா கேள்விகளும் சரிதான் ஒன்றைத்தவிற

\\செய்யாமல் இருந்தால் சுற்றத்தாரின் கேள்விகளுக்கு எவர் பதில் சொல்வது?\\

போதும் அடுத்தவர் என்ன சொல்வார் என பயந்து பயந்து நம் வாழ்வை இழந்தது.

அடுத்தவரைப்பற்று பார்க்காமல் சொந்தமாய் முடிவெடுக்கச்சொல்லுங்கள்

இராஜராஜன்

பூங்குழலி said...

நன்றி ராஜராஜன் .

ஆனால் இந்த கேள்விகள் என்னுடையவை அல்ல .எச்.ஐ.வி நோய் பாதிப்புள்ள குழந்தைகளின் பெற்றோருடையது .நேற்று வந்த பெண்ணுக்கு பத்தொன்பது வயது .அவள் அத்தை திருமணம் பற்றி பிறர் விசாரிக்கும் போதே மனம் பதறுகிறது என்கிறார் .இப்போதாவது படித்துக் கொண்டிருக்கிறாள் என்று சொல்லி சமாளிக்கலாம் .சில வருடங்கள் சென்ற பின் என்ன சொல்வது என்கிறார் .


நீங்கள் சொல்வது சரிதான் .ஆனால் இந்த கேள்விகள் பெற்றோர் மனதில் எழும் தானே ..

ஐந்திணை said...

கொடுமைங்க :-(