Tuesday 19 October 2010

மதுரையில் அம்மா

ஒரு வழியாக அம்மாவின் மதுரை திக் விஜயம் முடிந்தது .கொலை மிரட்டல் கடிதம் ,போன் என எப்படியோ இந்த கூட்டத்திற்கு ஒரு நல்ல விளம்பரம் முன்னமே கிடைத்திருந்தது .நல்ல கூட்டம் தான் .ஆனால் இவையெல்லாம் வரப்போகும் ஓட்டுகளா தெரியவில்லை .அமைச்சர் நெப்போலியன் கார் வேறு தாக்கப்பட்டது இருவருக்கும் செய்தி கிடைக்க ஏதுவாக போனது

பளிச்சென்று பதிந்தவை

அம்மாவின் நரை இல்லா தலை .
கரை வைத்த சேலை (மாங்காய் பார்டர் )-ரொம்ப சுமார்.
மேட்ச் இல்லாத கருப்பு கலர் வாட்ச்.

எம்.ஜி.ஆர் பேர் சொல்லப்பட்ட போதும் ,அவர் பாடல்கள் சொல்லப்பட்ட போதும் விசில், கைதட்டல் அதிகம் கேட்டது.

அழகிரி பற்றி (ஏற்கெனவே சொன்னதாக இருந்தாலும்) நிறைய்ய்ய்ய்ய்ய்ய்யய்ய பேசியது .
அவர் அஞ்சாநெஞ்சன் அல்ல ,நானே அஞ்சாதவள் -கூல்.

லீலாவதி கொலை முதற்கொண்டு பேசியது -அகழ்வாராய்ச்சி துறையில யாரும் உரை எழுதித் தராங்களா ?

மதுரையை மீட்பேன் +மதுரைக்கு சுதந்திரம் வாங்கித் தருவேன் -மதுரையை மீட்கப்போகும் சுந்தர மீனாட்சி ?

எங்களுக்கும் உள்ளே ஆள் இருக்கிறார்கள் -ஓஹோ!

கின்னஸ் ரெகார்ட் கூட்டம் -?!?!?!?

ஸ்டாலினே மதுரைக்கு விசா வாங்கிட்டு தான் வரணும் -பளிச்:)

நான் ஆணையிட்டால் ,பாட்டை அந்த வரிகளை விட்டுவிட்டு மேற்கோள் காட்டியது .

ஜெயா டி வி புகழ் -அவர்கள் மட்டும் தான் கழக செய்திகளைப் போடுகிறார்கள் (அதை தவிர வேறு எதை போடுகிறார்கள் என்று சொல்லியிருந்தால் நல்லா இருந்திருக்கும் )
ஊடகங்கள் நமக்கு என்றுமே சாதகமாக இல்லை

சிறுபடத் தயாரிப்பாளர்கள் சங்கடத்தில் இருப்பது ..புதுசு.

கோவையில் ஐந்து கிமீ முன்பே வாகனத்தை நிறுத்தினார்கள் ,திருச்சியில் பத்து கிமீ ,இன்று வாகனங்களை உள்ளே விட்டுவிட்டு ட்ராபிக் ஜாமாக்கி விட்டார்கள் (ஹி ஹி)
ஏர்போர்ட்டிலிருந்து இங்கு வர பதினைந்து நிமிடங்கள் தான் ஆகும் (சைரன் வச்ச காரில் ,இசட் கிளாஸ் செக்யூரிட்டியோட வந்தா அவ்வளவு நேரம் தான் ஆகும் ),இன்றைக்கோ இரண்டு மணிநேரம் ஆகியது -சந்தோசம் -கழகக் கண்மணிகளின் வரவேற்பு ,வருத்தம் -ஆளுங் கட்சியின் சதி -இதில் எது ?

கூட்டணி கணக்கு +கதை

ப்ளாஷ் நியூஸ் :

இப்போது வந்த செய்தி -மதுரையில் நாலு மணியிலிருந்து கரென்ட் இல்லை (எத்தனை மாசமாவோ ?)பவர் கட் ( அதனாலென்ன ஜெயா டிவியில் இன்னமும் பத்து நாட்களுக்கு போடலாமே ?)-வரும் தேர்தலில் தி மு கவின் பவரைக் கட் செய்யுங்கள் .பஞ்ச்


4 comments:

VJR said...

பிரச்சாரத்திற்கு வரும்போது வரும் கூட்டத்தையே கணிக்க முடியாது. வடிவுக்கரசியப் பாக்கவே வண்டிகட்டி வருவோம். இப்ப சொல்லவா வேணும். ஓட்டா மாறுமாங்குறது கலைஞர் கையிலும்,(அதாவது இன்னும் தப்பக்கூட்டிகிட்டே இருக்கனும்) கூட்டனி அமைப்பிலுந்தான் இருக்கு.

பூங்குழலி said...

அதுவும் இந்த கூட்டத்திற்கு ஆள் சேர்த்தே தீருவது என்ற வைராக்கியத்தோடு சேர்த்திருக்கிறார்கள் .கூட்டணி தான் வெற்றி தோல்வியை முடிவு செய்யும் +பணமும் .

அதிமுக எவரும் கணிக்க முடியாத அளவிலேயே தனது நிர்வாகத்தை வைத்திருக்கிறது. இப்போது பன்னீர்செல்வம் ,செங்கோட்டையன் போன்ற சிலராவது இன்னமும் எஞ்சியிருக்கிறார்கள் .இவர்களையும் ஓரங்கட்டாமல் வேலை செய்ய விட வேண்டும் ..

தேர்தல் வரும் வரை கட்சியினர் கூட்டம் போடும் ஊரில் பொதுமக்களுக்கு கஷ்டம் தான் .

தமிழ் உதயம் said...

பூங்குழலி said...

அதிமுக எவரும் கணிக்க முடியாத அளவிலேயே தனது நிர்வாகத்தை வைத்திருக்கிறது. இப்போது பன்னீர்செல்வம் ,செங்கோட்டையன் போன்ற சிலராவது இன்னமும் எஞ்சியிருக்கிறார்கள் .இவர்களையும் ஓரங்கட்டாமல் வேலை செய்ய விட வேண்டும் ..''////

ஜெ அவர்கள் அந்த பக்குவதத்தை வளர்த்து கொள்ள வேண்டும்.

பூங்குழலி said...

இத்தனை வருட அரசியலுக்கு பின்னரும் அந்த பக்குவம் வராதது ...கட்சிக்கு சிரமம் தான் .எவரையும் நம்ப மாட்டார் போலும்