Wednesday 13 April 2011

இன்று தேர்தல்

வாக்குப்பதிவு துவங்கிவிட்டது.எசன்ஷியல் சர்வீசாக மருத்துவமனை இருக்கிறதால ,இன்னைக்கி லீவு இல்ல (இல்லைனாலும் ரொம்ப குறைவாதான் லீவு தருவாங்க-நாளைக்கு நாளனைக்கு கூட லீவு இல்லைன்னா பாத்துக்கோங்க ).வெளிய கூட சொல்ல முடியாது .உடனே மருத்துவர்கள் சேவை செய்ய வேண்டும் ன்னு கொடி பிடிச்சிகிட்டு கிளம்பிடுவாங்க .அவசரம்ன்னு வரவங்களுக்கு பார்க்கிறதுக்கு மருத்துவர் இருக்கனும்ங்கறது நியாயம் தான்,ஆனா மத்தவங்க ?ஒரு வேலையும் இல்லாம கும்மி அடிக்க வேண்டியது தான் .கரென்ட் ,நெட் எல்லாம் வேஸ்ட் .இப்பக் கூட நாலு மருத்துவர்கள் இருக்கோம் .வந்த நோயாளிகள் ?மூச்சைப் பிடிச்சிக்கோங்க ...ஏழு பேர் .


வெளிய என்ன நடக்குதுன்னு தெரியல .விறுவிறுப்பா வாக்குப்பதிவு நடந்திட்டு இருக்கும்ன்னு நெனைக்கிறேன் .மத்தியானம் பெர்மிஷன் கொடுத்திருக்காங்க .ஆனா மத்தியானம் போனா ஒங்க வோட்டே இருக்காதுன்னு பயமுறுத்துறாங்க .சில பேர் இந்த தடவ அப்படியெல்லாம் பண்ண முடியாதுன்னு சொல்றாங்க .போய் பாத்தா தெரியும் .என்னோட வோட்டு இல்லன்னா அங்கேயே தர்ணா பண்ணலாம்ன்னு இருக்கேன் .விளம்பரமாவது கிடைக்கும் .


வேட்பாளரை தேர்ந்தெடுக்கறது கட்சிக்கு கூட சுலபம் தான் போலிருக்கு .பல சி களுடைய பெரும்பான்மை சாதியை சேர்ந்தவரா இருந்தா போதுமாமே ?(பெரியாரா ?யாருங்க அவரு ?தாடி வச்ச சத்தியராஜ் மாதிரி இருப்பாரே ?) நமக்கு தான் எரியற கொள்ளியில எந்த கொள்ளி நல்ல ? கொள்ளின்னு கண்டுபிடிக்க கஷ்டமா இருக்கு .இப்படியிருக்கேன்னு ஓட்டே போடாம விட்டிரலாம்ன்னா மனசாட்சி வருத்தப்படும் போலிருக்கு .


அய்யா கட்சிக்கு போடலாம்ன்னா எலெக்க்ஷனுக்கு அப்புறம் வடிவேலுவை முதல்வரக்கிடுவாங்களோ ன்னு பயமாயிருக்கு .அப்புறம், திருமதி ஸ்டாலின் வெயில கூட பட்டுபுடவ கட்டிக்கிட்டு ஓட்டு கேக்குறாங்க ,வயித்தெரிச்சலா இருக்கு .சரி இவங்கள விட்டுட்டு அம்மாவுக்கு போடலாம்ன்னா தலைநகரை கொடநாட்டுக்கு மாத்திடுவாங்களோன்னு யோசிக்க வேண்டியிருக்கு .கேப்டன் கட்சியில அவங்க வீட்டுக்காரம்மா நின்னிருந்தா கண்டிப்பா அவங்களுக்கு போட்டிருக்கலாம் .இந்த குழப்பம் போதாதுன்னு காங்கிரஸ் ,பி ஜே பி எல்லாம் வேற போட்டியிடறாங்களாமே ?சொல்லவே இல்ல ..


என்னோட தொகுதி மைலாப்பூர் .இங்கே காங்கிரஸ் சார்பா நடந்த பலே வேலையெல்லாம் பார்த்தப்புறம் ..(இது மாதிரி ஒரு களவாணி தலைவர் எந்த கட்சிக்கும் கொடுத்து வைக்கல ) 49 ௦ போடலாமான்னு பாக்கறேன் ,அதையும் போட்டு பாக்க வேண்டாமா .எங்கேயோ எழுதணுமாமே ?பி ஜே பி சார்பில வானதி மட்டும் தான் எங்க ஏரியாவில வோட்டு கேட்டு வந்தாங்க .மத்தவங்க கண்டுக்கல ,அதையும் யோசிக்க வேண்டியிருக்கு .அப்புறம் அவங்க பேரும் என்னோட பேரும் பொன்னியின் செல்வன் பேரா வேற இருக்கு .இதுவும் கொஞ்சம் சென்டிமென்ட்டா இருக்கு .அதிமுகவில ராஜலட்சுமி ன்னு ஒருத்தங்க நிக்கறாங்க .ரொம்ப அமைதியானவங்க போல .சத்தமே காணோம் .எங்கம்மா பேரும் அவங்க பேரும் ஒண்ணா இருக்கு .இப்படி பல குழப்பத்துல இருக்கேன் .பேசாம டிப் டிப் டிப் போட்டு பாக்கலாமான்னு யோசிச்சிட்டு இருக்கேன் .வாத்தியார் ஐயோ ஸாரி புரட்சிதலைவர் மட்டும் உயிரோட இருந்திருந்தா .........ம்



8 comments:

நிரூபன் said...

கரென்ட் ,நெட் எல்லாம் வேஸ்ட் .இப்பக் கூட நாலு மருத்துவர்கள் இருக்கோம் .வந்த நோயாளிகள் ?மூச்சைப் பிடிச்சிக்கோங்க ...ஏழு பேர்//

வணக்கம் சகோ, வாக்குப் போட்டாச்சா.. தமிழகத் தேர்தல் களம் எப்படியிருக்கிறது.

தேர்தலில் கலவரம் வேறு நடக்குதா.. திருந்தவே மாட்டாங்க நம்மாளுங்க சகோ.

நிரூபன் said...

மத்தியானம் போனா ஒங்க வோட்டே இருக்காதுன்னு பயமுறுத்துறாங்க //

கள்ள ஓட்டுக் காரங்க அவ்ளோ மோசமா?

நிரூபன் said...

இப்படியிருக்கேன்னு ஓட்டே போடாம விட்டிரலாம்ன்னா மனசாட்சி வருத்தப்படும் போலிருக்கு .//

காலத்திற்கு ஒரு தடவை வரும் எலக்‌ஷனைத் தவற விடுவது சரியில்ல. ஆகவே உங்கள் ஜனநாயக கடமையைத் தவற விட வேண்டாம்.

நிரூபன் said...

அய்யா கட்சிக்கு போடலாம்ன்னா எலெக்க்ஷனுக்கு அப்புறம் வடிவேலுவை முதல்வரக்கிடுவாங்களோ ன்னு பயமாயிருக்கு//

ஹி..ஹா...ஹி...

நிரூபன் said...

ஐயோ ஸாரி புரட்சிதலைவர் மட்டும் உயிரோட இருந்திருந்தா .........ம்//

ம்.. அவர் புண்ணியம் செய்தவர் போல, அதான் நல்ல வேளை வேளைக்கே போய்ச் சேர்ந்திட்டார். இந்த கருமாந்திர வேலைகளை நினைச்சால் வெறுப்பாகத் தான் இருக்கிறது.

அருள் said...

பதிவுலகப் போராளிகளுக்கு ஒரு வேண்டுகோள்.

http://arulgreen.blogspot.com/2011/04/blog-post_13.html

பூங்குழலி said...

ஓட்டு போட்டாச்சு நிரூபன் .ஓட்டு பத்திரமாக இருந்தது .ஆனால் ஓட்டு சதவீதம் ஐம்பதை நெருக்கியே இருக்கிறது .ரொம்ப குறைவு தான் .

//ம்.. அவர் புண்ணியம் செய்தவர் போல, அதான் நல்ல வேளை வேளைக்கே போய்ச் சேர்ந்திட்டார். இந்த கருமாந்திர வேலைகளை நினைச்சால் வெறுப்பாகத் தான் இருக்கிறது//

ஆமாம் நிரூபன் அவரை போல மக்களை நெருங்கக் கூடிய தலைவர்கள் இல்லாமல் போனது பெரிய பின்னடைவு தான்

பூங்குழலி said...

பதிவுலகப் போராளிகளுக்கு ஒரு வேண்டுகோள்.

http://arulgreen.blogspot.com/2011/04/blog-post_13.html

அன்புள்ள அருள் ,உங்கள் பதிவை படித்தாகி விட்டது .என் கருத்தையும் போட்டாகி விட்டது .நன்றி