Tuesday 16 October 2012

ஹோட்டல் அறையில் ...








                                                             

என்றோ
கடந்த ஒரு பயணத்தில்
தங்க நேர்ந்தது  
அவ்வறையில்
 

நான்கு சுவர்களும்
பளீர் வர்ணங்களுமாக
வழமை போலவே 
இருந்தது அவ்வறை ...
இறகுகள்  தைத்த  தலையணையும்
மேகங்கள் பொதித்த மெத்தையும்
இடப்பட்டிருந்தது  வழமை போலவே ....


நான்  நுழைந்த 
ஒரு நொடியில்
வெளியேறிப் போனது
பிறருடைய தடங்களும்
அறையை நிரப்பியிருந்த
அவர்களின் மூச்சுக் காற்றும்


வெற்றாகிப்  போன
அவ்வறையில்
தேங்கிப் போயின
என் மூச்சும்
என் சிரிப்புகளும் 



சுவர்கள் எங்கும் பதிந்து கிடந்தன
என் கண்கள்
தலையணையில் சிக்கிக் கிடந்தன
சில கனவுகள்
தரையெங்கும் சிதறிக் கிடந்தன
சில விசும்பல்களும்
என்னின்  தலைமுடியும்  



பயணம் முடிந்த  ஒரு நாளில் 
ஏதும்  சொல்லாமல்
என் தடயங்கள் அழித்து
புறப்பட்டு வந்தேன் நான்


மறுநாளில்
எவருக்கோ சொந்தமாகியிருக்கும்
அவ்வறையும் 


அந்நாளில்
ஜன்னலில்
என் தலைகோதிய காற்று
சொல்லி போயிருக்கக் கூடும்
அவள்  இங்கிருந்தாளென ....




21 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லதொரு அனுபவ வரிகள்...

அருணா செல்வம் said...

வித்தியாசமான கற்பனை...

Seeni said...

appudiyaa..


rasanai..

Yaathoramani.blogspot.com said...

அறையை ஊரோடும் உலகோடும்
சிறிது நேரம் ஒப்பிட்டுப் பார்த்து மகிழ்ந்தேன்
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

சசிகலா said...

வெற்றாகிப் போன
அவ்வறையில்
தேங்கிப் போயின
என் மூச்சும்
என் சிரிப்புகளும் .

அழகிய கற்பனை.

பால கணேஷ் said...

அனைவருக்கும நேர்ந்திருக்கும் அனுபவம் எனினும் இப்படி ஒரு வித்தியாசமான கோணத்தில் பார்க்க வேண்டும் என்றால் அதற்குக் கவிதை மனம் வேண்டும் போலும். கருப்பொருளும் சரி, வார்த்தைகளும் சரி அசரடித்தன, ரசிக்க வைத்தன. சூப்பர்.

-தோழன் மபா, தமிழன் வீதி said...

கவிதை
என் அறையெங்கும்
வியாபித்திருந்தது....!

பூங்குழலி said...

உங்கள் தொடர் ஆதரவிற்கும் பாராட்டுக்கும் நன்றி தனபாலன்

பூங்குழலி said...

நன்றி அருணா

பூங்குழலி said...

உங்கள் ஒற்றை வார்த்தை பாராட்டுகள் ரசனையானவை -நன்றி சீனி

பூங்குழலி said...

ஆமாம் ரமணி அவர்களே -ஒப்பிட்டு பார்த்தால் நீங்கள் சொல்வது போலே தான் ..மிக்க நன்றி

பூங்குழலி said...

மிக்க நன்றி சசிகலா -இத்தனை ஊன்றி ரசித்தமைக்கு

பூங்குழலி said...

மிக்க நன்றி கணேஷ் -உங்களை போன்ற பலரின் அன்பு என் கவிதைகளுக்கு மெருகேற்றுகிறது

பூங்குழலி said...

மிக்க நன்றி தோழரே -உங்கள் பாராட்டு என் மனம் எங்கும் வியாபிக்கிறது

Unknown said...

கவிதையின் தலைப்பை தமிழில் சூட்டியிருந்தால் இன்னும் அழகு கூடியிருக்கும் வாழ்த்துக்கள்!!

பூங்குழலி said...

மிக்க நன்றி -நீங்கள் சொல்வது சரியே அஹமத்

சீராளன்.வீ said...

அந்நாளில்
ஜன்னலில்
என் தலைகோதிய காற்று
சொல்லி போயிருக்கக் கூடும்
அவள் இங்கிருந்தாளென ....
...........................true words...

பூங்குழலி said...

மிக்க நன்றி சீராளன்

Kavinaya said...

very sweet :)

பூங்குழலி said...

நல்வரவு கவிநயா ..எத்தனை நாட்கள் ஆயிற்று ..நலம் தானே ?மிக்க நன்றி

பூங்குழலி said...

தகவலுக்கு நன்றி தனபாலன்