Friday 4 July 2014

இன்னொரு நாளில்



வருவாயோ என்றேன்
வரலாமே   என்றது
வரலாம்  என்றேன்
வருவேன்  என்றது
என்றோ என்றேன்
இன்னொரு  நாளில் என்றது
இன்னும் ஒரு  நாளிலோ  என்றேன்
ம் ..பின்னர்  ஒரு நாளில் என்றது
பல நாள் போனது என்றேன்
இன்னமும் சில போகட்டுமே என்றது
நாள் நில்லாதே என்றேன்
செல்லட்டுமே என்றது
பொல்லாத்தனம் என்றேன்
பொல்லாதவள் என்றது
சொல்லால் அயர்ந்து
சுணங்கிக் கிடந்தேன் ...
இடியாய் மேளதாளம் கொட்ட
நான் நினையாத ஒரு நாளில்
என் வாசல் வந்து
சதிராடிச் சென்றது
மழை 


4 comments:

பால கணேஷ் said...

அது எப்பவுமே இப்படித்தாங்க... ஏங்க வைத்துப் பின்தான் வருகிறது. ஆனால் வருகையில் எல்லாம் கொள்ளை கொள்ளையாய் தரத் தவறுவதில்லை மகிழ்வை. மனதை ரசனையில் நனைத்த இனிய கவிதை.

Mohan raj said...

அருமை

பூங்குழலி said...

ரொம்ப நன்றி கணேஷ் .பல நாளாய் மழை கவிதைகள் பக்கம் காணோமே என்று நினைத்தேன் ,வந்து நிற்கிறீர்கள்

பூங்குழலி said...

நன்றி மோகன்ராஜ்