Sunday 12 November 2017

பழந்தூசு

வாழ்பவர் ,கடந்து போகும் பயணி
இறந்தவர் ,வீடு சேர்ந்தவர்
சொர்க்கம்  பூமி இடையே ஒரு குறு பயணம்
அதன்பின்,
நாம் பத்தாயிரம் நூற்றாண்டுகளின் பழந்தூசு மட்டுமே 
நிலாவில் முயல் மருந்துகளை வீணே இடிக்கிறது
ஃபூ -சங்  ,இறவாவரத்தின் மரம் 
எரியும் விறகுகளாக  நொறுங்கி போனது
மனிதன் இறக்கிறான் ,
அவன் வெள்ளை எலும்புகள் வார்த்தையற்று ஊமைகளாகின்றன, 
பச்சை பைன்கள் வசந்தத்தின் வருகை உணரும் போது .
திரும்பி பார்த்து பெருமூச்செறிகிறேன் ,
முன்னும் பார்த்தும் பெருமூச்செறிகிறேன்
மெச்ச என்ன இருக்கிறது  
வாழ்க்கையின்  கணநேர பெருமையில்...




The Old Dust - Poem by Li Po


The living is a passing traveler;
The dead, a man come home.
One brief journey betwixt heaven and earth,
Then, alas! we are the same old dust of ten thousand ages.
The rabbit in the moon pounds the medicine in vain;
Fu-sang, the tree of immortality, has crumbled to kindling wood.
Man dies, his white bones are dumb without a word
When the green pines feel the coming of the spring.
Looking back, I sigh; looking before, I sigh again.
What is there to prize in the life's vaporous glory?



4 comments:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
அம்மா

மிகச்சிறப்பாக மனம் உருகும்படி சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

பூங்குழலி said...

நெஞ்சார்ந்த நன்றி ரூபன.

மனோ சாமிநாதன் said...

' பொய்யாய் பழங்கதையாய் கனவாய் மெல்லப்போன‌துவே' என்ற பாரதியின் வரிகள் நினைவுக்கு வருகின்றன இந்த 'பழந்தூசி'யைப்படிக்கையில். நாம் செய்யும் நல்ல‌வைகள் மட்டுமே நமக்குப்பினாலும் நம் பெயர் சொல்லும்!!

பூங்குழலி said...

உண்மைதான் - from dust to dust என்பது போல -மிக்க நன்றி மனோ சாமிநாதன்