Wednesday 29 October 2008

பாட்டி

பாட்டியை பற்றிய சுவாரசியமான நிகழ்வு இது .
பாட்டி எங்கள் வீட்டில் எப்போதும் நார் கட்டிலில் ஜன்னல் ஓரம் படுத்திருப்பார் .

ஒரு நாள் காலையில் ,"எவனோ களவாணிப் பய ஜன்னல் பக்கம் வந்து ராத்திரியிலே என் கையை தொட்டான் .நா கதிரவன் தான் படுக்க வர்றான் ன்னு நெனைச்சி ஏலே சின்ன மணி தள்ளி படு ,தள்ளி படு ன்னு சொல்லிகிட்டே இருக்கேன் குதிச்சு ஓடிட்டான் ,"என்றார் .

எங்கள் எல்லாருக்கும் இது ஏனோ ரொம்ப வேடிக்கையாய் இருந்தது .பாட்டி,"ஏதாவது கனவாயிருக்கும் "என்றதுக்கு "ஏளா , எனக்கு தெரியாதா ....." இது பாட்டி .
சரியென துப்பறியும் வேலை பார்த்ததில் ஜன்னல் ஓரம் காலடி சுவடுகள் .பாட்டி சொன்னது உண்மை தான் .


இதில் பயந்துபோன பாட்டி ஜன்னலிலிருந்து இரண்டு அடி கட்டிலை தள்ளி இழுத்த பிறகு தான் தூங்கப் போவார் ."பாசத்தால் திருடனை விரட்டி விட்டார் பாட்டி "என்றும் "கையை தொட்டவன் காதை தொட்டிருந்தா பாமடமாவது கிடைத்திருக்கும் "என்றும் பாட்டியை கிண்டல் செய்து கொண்டிருந்தோம் சில காலம் .


1 comment:

shanevel said...

அட பாட்டிகிட்ட இல்லாதது பொல்லாததுலாம் சொல்லிட்டீங்களே... பெரியவங்களை இப்படியா பயமுறுத்துவது? அது பூனை ன்னு சொல்லிருக்கலாம் ல..!