Monday, 2 September 2019

வசந்தம்

வயல்கள் சில்லிட்டிருக்கின்றன
பரவலான மழை விட்டது
வசந்தத்தின் நிறங்கள் எங்கும் மொய்க்கின்றன 
துள்ளும் மீன்களால் நிரம்பியிருக்கிறது நீலக்குளம்
பாடும் குருவிகளால் தோய்ந்திருக்கின்றன  பச்சைக்கிளைகள்
வயல் பூக்கள் அலசுகின்றன தங்கள்  அரிதாரக் கன்னங்களை
மலை புட்கள் இடுப்பளவில்  வளைந்திருக்கின்றன
மூங்கில் ஓடை ஓரம்,
காற்றடித்து
மெல்ல சிதறுகிறது
மேகத்தின் மிச்சம்  ...

Climbing  West Of Lotus Flower Peak - Poem by Li Po


The fields are chill, the sparse rain has stopped;
The colours of Spring teem on every side.
With leaping fish the blue pond is full;
With singing thrushes the green boughs droop.
The flowers of the field have dabbled their powdered cheeks;
The mountain grasses are bent level at the waist.
By the bamboo stream the last fragment of cloud
Blown by the wind slowly scatters away.


Sunday, 1 September 2019

மொக்கை

மொக்கைகளை   பற்றிய  ஒரு பதிவு .

படிப்பது என்பது எளிதானதல்ல .நமக்கு அது எளிதானதாக வாய்க்கப் பெற்றிருந்தால் அது ஒரு வரம் .எத்தனையோ தேடல்கள் தேவைகள் நோக்கி நிற்க நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருப்பவர்களிடம் நீ படிக்காததால் மொக்கை என்று சொல்வதே ஒரு மேட்டுமைத்தனம். இதை தெரியுமா அதை தெரியுமா என்றெல்லாம் ஏளனம் பேச நாம் யார் ?
எங்கப்பா கணித பேராசிரியர் ,எல்லாம் படிப்பார் .கம்பராமாயணம்,சிலப்பதிகாரம் முதல் ஷேக்ஸ்பியர் ,வுட்ஹவுஸ் வரையும். .Wodehouse ,Thomas Hardy எல்லாம் எனக்கு ஆறாம் வகுப்பிலேயே அறிமுகம் செய்து வைத்தார் .அருகில் கிடைக்காத சூழலில் நண்பர்களின் கல்லூரி நூலகங்களில் இருந்து தேடி எடுத்து வந்து தந்தார் .இன்று வரையில் அப்பா நாத்திகர் .பெரியார் அண்ணா கலைஞர் அபிமானி .ஆனாலும் நானாக தேடியே பெரியார் நூல்களை படித்தேன் .என்ன சொல்லியிருக்கிறார் பார்க்கலாமே என்று வாங்கி இன்று ஓரளவு படித்திருக்கிறேன்  .

எங்கம்மா சென்னை பல்கலைக்கழகத்தின் பொருளாதார துறையின் முதல் பெண் தலைவர் .தன் துறை சார்ந்து பல புத்தகங்கள் எழுதியவர் .சிறு வயதில் குமுதம் படித்ததற்காக அடி வாங்கியவர் .அவர் சொல்வார் "reading is  a luxury ".அதற்கு பணம் இடம் நேரம் அனுமதி என்று பல விஷயங்கள் தேவைப்படுகிறது .அது எல்லோருக்கும் கிட்டுவதில்லை .எங்கு  படிப்பீர்கள் ?நூலகங்கள் வரையில் செல்ல நேரம் இருக்கிறதா ?உங்கள் அருகில் இருக்கும் நூலகங்களில் நீங்க படிக்க விரும்பும் நூல் இருக்கிறதா ?இல்லை வாங்குவீர்களானால் எவ்வளவு ரூபாய்க்கு வாங்குவீர்கள் ?எங்கே வைப்பீர்கள் ?எங்கு படிப்பீர்கள் ?படித்த பின் என்ன செய்வீர்கள்? எல்லாம் எல்லோருக்கும் எளிதாய் அமைவதில்லை .இணையம் எல்லாவற்றையும் இலவசமாக கொடுக்கிறதா ?

என் அப்பா  தலைமுறை தமிழகத்தை பொருத்த வரையில் பெரியார் அண்ணா என ஒரு மறுமலர்ச்சியின் தலைமுறை .அந்த தலைமுறையின் உழைப்பை அறுவடை செய்கின்றன  பின்வந்த தலைமுறைகள் .ஆனால் அந்த தலைமுறை தங்கள் உழைப்பையும் அதற்கு முன்னான நிலைமையையும்  முன்னேறிய மகிழ்ச்சியில் சரியாக சொல்ல மறந்து போனார்கள் .அதுவும் இன்றைய நிலைக்கு ஒரு காரணம் .

ஆனாலும் இவை எல்லாவற்றையும் தாண்டியும் வாசிப்பையே ஒரு தேடலாக செய்பவர்கள்  இருக்கிறார்கள் .இருப்பார்கள் .Sunday, 26 May 2019

நீர்வீழ்ச்சி


கதிரொளி  பாய்கிறது  ஆற்று கற்களில் .
ஆறு தடுமாறாமல் தாவுகிறது
பல உயரத்திலிருந்து-
மூவாயிரம் அடிகள் மின்னும் தண்ணீர்
வானிலிருந்து பொழியும் பால்வெளி 
Waterfall At Lu-Shan - Poem by Li Po

Sunlight streams on the river stones.
From high above, the river steadily plunges--

three thousand feet of sparkling water--
the Milky Way pouring down from heaven.


Sunday, 19 May 2019

விடை

தெற்கு சுவர்கள் தாண்டி கிடக்கின்றன நீல மலைகள்
நகரின் கிழக்கணைத்து போகிறது வெள்ளை தண்ணீர்
நண்பனே , இங்கே  பிரிகிறோம்
ஒருமுறை என்றென்றைக்கும்
பத்தாயிரம் மைல் போ ,
வேர்க்கொள்ளாத   ஆற்றுப்புல் போல, மிதந்து..
ஓ !மிதக்கும் மேகங்களும் பயணியின் எண்ணங்களும்
ஓ !அஸ்தமனமும்  பழைய நண்பனின் ஏக்கமும்
கையசைத்து பிரிகிறோம் வேறு திசைகளில்
நம் குதிரைகள் கனைக்கின்றன..மெல்ல மெல்ல    ...
Taking leave of a friend ...
Li Po 

Blue mountains lie beyond the north wall;
Round the city's eastern side flows the white water.
Here we part, friend, once forever.
You go ten thousand miles, drifting away
Like an unrooted water-grass.
Oh, the floating clouds and the thoughts of a wanderer!
Oh, the sunset and the longing of an old friend!
We ride away from each other, waving our hands,
While our horses neigh softly, softly . . . . 

Saturday, 19 January 2019

பேட்ட பராக்

பேட்ட

first half  -பரவாயில்ல
second half  -உண்மைய சொன்னா ஒரு குரூப் வீச்சருவாளோட குறுக்கயும் நெடுக்கையும்  ஓடுவாங்க..அதனால வேண்டாம்

1.படத்துல பெஸ்ட் சிம்ரன் வர சீன்ஸ் தான் .(எவ்வளவு  ஒல்லியா இருக்காங்க .பொறாமையா  இருக்கு ).ஆனா சிம்ரனுக்கு டான்ஸ் கொடுக்காத பாவமெல்லாம் சும்மா விடாது . 
2.நியாயமா இசை இளையராஜா /எம்எஸ்வினு தான் போடணும் -அனிருத்தாமே ?
3.Nawazuddin Siddiqui -பாவம் என்ன சொல்லி கூட்டிட்டு வந்தாங்களோ தெரியல .நிஜமாவே படக்குழு மேல அவர் ஒரு நாட்டு வெடிகுண்டு வீசலாம் .நியாயம் இருக்கு .
4.விஜய் சேதுபதி -இவர் என்ட்ரிக்கு தான் அப்லாஸ் அள்ளுது .வெயிட்டான ரோல்னு வெயிட்டாகியிருப்பாரு போல .யாராவது நலம் விரும்பிகள் ஆலோசனை சொல்ல கூடாதா ?ரஜினி வேற இவர் பக்கத்துல ரொம்ப குட்டியா தெரிறாரு .இவருக்காக  படத்தோட second half அ ஜவ்வு factoryல வச்சு எடுத்திருக்காங்க போல .முடியல.மிட்ரோன் ,வெப்பன் ,beefனு சான்ஸ் கிடைக்கற ப்பெல்லாம் அடிக்கிறாப்ல .சீக்கிரமா அரசியலுக்கு வருவார்ன்னு எதிர்பார்க்கிறேன் .
5.நிறைய  தெரிஞ்ச முகமெல்லாம் திடீர் திடீர்ன்னு வராங்க .சின்னி  ஜெயந்த் ,த்ரிஷா ,இன்ன பிறர் .ரஜினி ரொம்ப நாள் நடிக்க மாட்டார் .அதனால் கிடைக்கற சான்சை விட வேண்டாம்ன்னு முடிவு பண்ணிருப்பாங்க போல.ஆனா Mahendran stands out .
6.ரஜினிக்கு காஸ்ட்யூம்ஸ் நல்லா இருக்கு .second half ல  லிங்கா ரஜினி மெலிஞ்ச மாதிரி இருக்காரு .கபாலி படம் வெளியானப்ப ரஞ்சித் ரஜினி போட்ட ஓரே கண்டிஷன் டான்ஸ் ஆட மாட்டேன்ங்கிறது தான்னு சொன்னார் .இந்த படத்துல சொல்ல மறந்துட்டார் போல .இல்ல இந்த கேப்ல டான்ஸ் practice பண்ணிருப்பாரு போல .நிறைய ஆடுறாரு .ரஜினிக்கு டான்ஸ் பீக்லேயே ஆட வராது .இப்பவும் வரல .அவருக்கு அது தேவையும் இல்ல.பாட்ஷா படத்துல வர அழகு பாட்ட ஒரு தடவ பாத்துக்கோங்க . இயக்குனருக்கு 

க்ளைமேஸ்ல எதுக்கு ராமன் ஆண்டாலும் பாட்டு ?கரெக்ட்டா பாத்தா பொதுவாக எம்மனசு தங்கம் தான் வந்திருக்கனும்.
இந்த தலைமுறை திரையில் பார்க்காத ரஜினியை படம் பிடித்திருக்கிறீர்கள் .சரி .ஆனா பழைய படங்களின் காட்சிகளை அப்படியே  எதுக்கு  ரீமேக் பண்ணனும் ?சொல்ற காட்சியை ஸ்டைலா பண்ண ரஜினிக்கு தெரியுமே ?.ஒரு self caricature மாதிரி அவரையே வைத்து அவரையே இமிடேட் செய்வது என்ன முறை  ?அதுக்கு எதுக்கு ரஜினி ?ஒரு ரஜினி ரசிகரா இந்த படத்தை பண்ணியிருக்கதா சொல்றீங்க .ஆனா அவரை ரசித்த ஒரு இயக்குநரா,ஜிகிர்தண்டா போன்ற படங்களின் பின்னணியோட ,அவரை இயக்க ஒரு வாய்ப்பு கிடைச்சா இப்படி எடுக்கணும்ன்னு ஒரு கனவு கண்டிருப்பீங்களே ,அந்த ரஜினியை நீங்க தருவீங்கன்னு எதிர்பார்த்தோம் .ஆனா நீங்க எஸ்பிஎம் காலத்துக்கு அவர பின்னாடி தள்ளிவிட்டுட்டீங்க .
disappointing.

சமீப கால ரஜினி படங்கள்ல தீ பெஸ்ட் கபாலி தான் .நடிப்பு ஸ்டைல்னு ரஜினி கொடிகட்டி பறந்த படம் .ஒவ்வொரு ஷாட்லேயும் ரஞ்சித்துக்கு ரஜினி மேல இருக்க காதல் தெரியும் .சில வருஷம் கழிச்சு பாத்தா இந்த பேட்ட குப்பை மாதிரி இருக்கும் .வருத்தங்கள் .

பேட்ட - "a tribute to Rajni by Rajni " - unfortunately so ... 


 https://poongulali.blogspot.com/2016/08/blog-post_23.html