Saturday 19 January 2019

பேட்ட பராக்

பேட்ட

first half  -பரவாயில்ல
second half  -உண்மைய சொன்னா ஒரு குரூப் வீச்சருவாளோட குறுக்கயும் நெடுக்கையும்  ஓடுவாங்க..அதனால வேண்டாம்

1.படத்துல பெஸ்ட் சிம்ரன் வர சீன்ஸ் தான் .(எவ்வளவு  ஒல்லியா இருக்காங்க .பொறாமையா  இருக்கு ).ஆனா சிம்ரனுக்கு டான்ஸ் கொடுக்காத பாவமெல்லாம் சும்மா விடாது . 
2.நியாயமா இசை இளையராஜா /எம்எஸ்வினு தான் போடணும் -அனிருத்தாமே ?
3.Nawazuddin Siddiqui -பாவம் என்ன சொல்லி கூட்டிட்டு வந்தாங்களோ தெரியல .நிஜமாவே படக்குழு மேல அவர் ஒரு நாட்டு வெடிகுண்டு வீசலாம் .நியாயம் இருக்கு .
4.விஜய் சேதுபதி -இவர் என்ட்ரிக்கு தான் அப்லாஸ் அள்ளுது .வெயிட்டான ரோல்னு வெயிட்டாகியிருப்பாரு போல .யாராவது நலம் விரும்பிகள் ஆலோசனை சொல்ல கூடாதா ?ரஜினி வேற இவர் பக்கத்துல ரொம்ப குட்டியா தெரிறாரு .இவருக்காக  படத்தோட second half அ ஜவ்வு factoryல வச்சு எடுத்திருக்காங்க போல .முடியல.மிட்ரோன் ,வெப்பன் ,beefனு சான்ஸ் கிடைக்கற ப்பெல்லாம் அடிக்கிறாப்ல .சீக்கிரமா அரசியலுக்கு வருவார்ன்னு எதிர்பார்க்கிறேன் .
5.நிறைய  தெரிஞ்ச முகமெல்லாம் திடீர் திடீர்ன்னு வராங்க .சின்னி  ஜெயந்த் ,த்ரிஷா ,இன்ன பிறர் .ரஜினி ரொம்ப நாள் நடிக்க மாட்டார் .அதனால் கிடைக்கற சான்சை விட வேண்டாம்ன்னு முடிவு பண்ணிருப்பாங்க போல.ஆனா Mahendran stands out .
6.ரஜினிக்கு காஸ்ட்யூம்ஸ் நல்லா இருக்கு .second half ல  லிங்கா ரஜினி மெலிஞ்ச மாதிரி இருக்காரு .கபாலி படம் வெளியானப்ப ரஞ்சித் ரஜினி போட்ட ஓரே கண்டிஷன் டான்ஸ் ஆட மாட்டேன்ங்கிறது தான்னு சொன்னார் .இந்த படத்துல சொல்ல மறந்துட்டார் போல .இல்ல இந்த கேப்ல டான்ஸ் practice பண்ணிருப்பாரு போல .நிறைய ஆடுறாரு .ரஜினிக்கு டான்ஸ் பீக்லேயே ஆட வராது .இப்பவும் வரல .அவருக்கு அது தேவையும் இல்ல.பாட்ஷா படத்துல வர அழகு பாட்ட ஒரு தடவ பாத்துக்கோங்க .



 இயக்குனருக்கு 

க்ளைமேஸ்ல எதுக்கு ராமன் ஆண்டாலும் பாட்டு ?கரெக்ட்டா பாத்தா பொதுவாக எம்மனசு தங்கம் தான் வந்திருக்கனும்.
இந்த தலைமுறை திரையில் பார்க்காத ரஜினியை படம் பிடித்திருக்கிறீர்கள் .சரி .ஆனா பழைய படங்களின் காட்சிகளை அப்படியே  எதுக்கு  ரீமேக் பண்ணனும் ?சொல்ற காட்சியை ஸ்டைலா பண்ண ரஜினிக்கு தெரியுமே ?.ஒரு self caricature மாதிரி அவரையே வைத்து அவரையே இமிடேட் செய்வது என்ன முறை  ?அதுக்கு எதுக்கு ரஜினி ?ஒரு ரஜினி ரசிகரா இந்த படத்தை பண்ணியிருக்கதா சொல்றீங்க .ஆனா அவரை ரசித்த ஒரு இயக்குநரா,ஜிகிர்தண்டா போன்ற படங்களின் பின்னணியோட ,அவரை இயக்க ஒரு வாய்ப்பு கிடைச்சா இப்படி எடுக்கணும்ன்னு ஒரு கனவு கண்டிருப்பீங்களே ,அந்த ரஜினியை நீங்க தருவீங்கன்னு எதிர்பார்த்தோம் .ஆனா நீங்க எஸ்பிஎம் காலத்துக்கு அவர பின்னாடி தள்ளிவிட்டுட்டீங்க .
disappointing.

சமீப கால ரஜினி படங்கள்ல தீ பெஸ்ட் கபாலி தான் .நடிப்பு ஸ்டைல்னு ரஜினி கொடிகட்டி பறந்த படம் .ஒவ்வொரு ஷாட்லேயும் ரஞ்சித்துக்கு ரஜினி மேல இருக்க காதல் தெரியும் .சில வருஷம் கழிச்சு பாத்தா இந்த பேட்ட குப்பை மாதிரி இருக்கும் .வருத்தங்கள் .

பேட்ட - "a tribute to Rajni by Rajni " - unfortunately so ... 


 https://poongulali.blogspot.com/2016/08/blog-post_23.html












No comments: