Friday, 12 December 2008

இன்றும்

இன்றும் ஒரு நாளில்
பூக்கும் என் சிரிப்பைஎல்லாம்
அரும்புகளாகவே கிள்ளி எறிகிறாய்


என் வாசல்வரை வந்த வசந்தங்களை
கதவிடுக்குகள் வழியே
விரட்டியடிக்கிறாய்


மகிழ்ச்சிகள் துளிர்த்த போதெல்லாம்
வெந்நீர் ஊற்றி அவற்றை
வேக விடுகிறாய்



தப்பி சிதறிய என் முகவரிகள்
சிலவற்றையேனும்
தீயிட்டு அழிக்கிறாய்


எஞ்சிப் போன சில வெற்றுத் தாள்களில்
மீண்டும் மீண்டும் எழுத முயன்று
உயிர் வலித்துப் போகிற நான் .........


காட்டாறாய் உருமாறிஅணை உடைக்கும் போது
நீயும் தொலைந்து போவாயென
இன்றும் அமைதியாய்.....


5 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

மேடம், என்ன ஆச்சுங்க

ஒரே சோக மயமாய்..........

Unknown said...

நல்லா இருக்கு.ஆனால் இது மாதிரி( தமிழ் ம்ணத்தில் கொட்டிக் கிடக்கிறது) நிறைய படித்தாகி விட்டது. கொஞ்சம் வேறு மாதிரி........

பூங்குழலி said...

ரொம்ப நன்றி ......ரவி ஷங்கர் ,சுரேஷ் ......

ஆனால் இது மாதிரி( தமிழ் ம்ணத்தில் கொட்டிக் கிடக்கிறது) நிறைய படித்தாகி விட்டது. கொஞ்சம் வேறு மாதிரி........
உண்மைதான் ரொம்பவே சராசரியான கருத்துகள் தான் ....
ஆனால் பல நாள் இப்படி நினைத்து எழுதாமல் விட்டதில் எழுதவே மறந்து போனேன் ...
அதனால் தான் ..


உங்கள் நேர்மையான விமர்சனத்திற்கு நன்றி

தேவன் மாயம் said...

காட்டாறாய் உருமாறிஅணை உடைக்கும் போது
நீயும் தொலைந்து போவாயென
இன்றும் அமைதியாய்///

ஒவ்வொரு கவிதையும் புதிதுதான்!!
தொடருங்க!!!
தேவா...

பூங்குழலி said...

நன்றி தேவா