வெறும் கல்லெனவே ஈன்றார்கள் என்னை
என் மேல் நோகாமல்
கை நோக செதுக்கினார்கள் பொறுமையாக
சிற்பம்போல் ஆக்கி காத்திருந்தார்கள்
நீ வர ....
அந்நாளில் பார்த்த போது
சிற்பமாகவே தெரிந்தேன் உனக்கும்
எஞ்சியிருந்த துகள்கள் கூட
அழகெனவே சொன்னாய்
அப்போது ...
எது மாறிப் போனதோ
உளி கொண்டு புறப்பட்டாய்,
செதுக்குவதாய் எண்ணிக் கொண்டு
சிதைக்க மட்டுமே செய்கிறாய்.
உடைந்த கற்களாய் உதிர்ந்து கொண்டிருக்கிறேன் நான்...
என் மேல் நோகாமல்
கை நோக செதுக்கினார்கள் பொறுமையாக
சிற்பம்போல் ஆக்கி காத்திருந்தார்கள்
நீ வர ....
அந்நாளில் பார்த்த போது
சிற்பமாகவே தெரிந்தேன் உனக்கும்
எஞ்சியிருந்த துகள்கள் கூட
அழகெனவே சொன்னாய்
அப்போது ...
எது மாறிப் போனதோ
உளி கொண்டு புறப்பட்டாய்,
செதுக்குவதாய் எண்ணிக் கொண்டு
சிதைக்க மட்டுமே செய்கிறாய்.
உடைந்த கற்களாய் உதிர்ந்து கொண்டிருக்கிறேன் நான்...
4 comments:
//செதுக்குவதாய் எண்ணிக் கொண்டு
சிதைக்க மட்டுமே செய்கிறாய்.//
:(( பல சமயங்களில் வாழ்க்கை இப்படித்தான் ஆகிவிடுகிறது. அழகா எழுதியிருக்கீங்க.
பாராட்டுக்களை அள்ளித் தெளித்திருக்கிறீர்கள் ,நன்றி கவிநயா
ஆஹா இறுதி வரிகள் அற்புதம்... தொடக்கத்தை அழகுபடுத்தி அமைதியாக நிற்கிறது... ஆழ்ந்த சோகத்தைச் சொல்லியிருக்கிறீர்கள்...
கருத்துக்கு நன்றி காயத்ரி
Post a Comment