Wednesday, 4 August 2010

என் கோலங்கள்


சின்னதும் இல்லாமல்
பெரிதாகவும் இல்லாமல்
சரியானதாக இருந்த
என் வீட்டு வாசலில்
கம்பீரமாய் கொலுவிருந்தன
என் கோலங்கள்

புள்ளிகள்
புள்ளிகள் சீண்டி அகன்றும்
குறுக்கே ஓடியும் விளையாடும் கோடுகளென
வாசல் முழுக்கவும்
களித்துக் கிடந்தன

மயில்களின் ஆட்டம்
குயில்களின் கானம்
யானைகளின் ஊர்வலம் என
நித்தம் திருவிழாவாக
இறுமாந்திருந்தது என் வாசலும்

எவர் கண்பட்டதோ
இன்று கையளவாகப் போனது
என் வாசல்
எவர் வீட்டு வாசலில்
ஒண்டுவதென இடம் தேடி
கலங்கி அலைகின்றன
அனாதைகள் போல்
என் கோலங்கள்


12 comments:

அகல்விளக்கு said...

அருமை....
:-)

பூங்குழலி said...

மிக்க நன்றி அகல்விளக்கு

ரிஷபன் said...

இன்று கையளவாகப் போனது
என் வாசல்
எவர் வீட்டு வாசலில்
ஒண்டுவதென இடம் தேடி
கலங்கி அலைகின்றன
அனாதைகள் போல்
என் கோலங்கள்

சபாஷ்!

பூங்குழலி said...

உற்சாகமான பாராட்டுக்கு மிக்க நன்றி ரிஷபன்

எஸ்.கே said...

கவிதை நன்றாக உள்ளது!

பூங்குழலி said...

பாராட்டுக்கு நன்றி எஸ்.கே

கவிநா... said...

//இன்று கையளவாகப் போனது
என் வாசல்
எவர் வீட்டு வாசலில்
ஒண்டுவதென இடம் தேடி
கலங்கி அலைகின்றன
அனாதைகள் போல்
என் கோலங்கள்//

super.. finishing touch super akka...

பூங்குழலி said...

ரொம்ப நன்றி கவிநா

VELU.G said...

மிக அருமையான கவிதை

பூங்குழலி said...

மிக்க நன்றி வேலு

maithriim said...

நிதர்சனமான உண்மை :-)கோலம போடுவது பெண்ணின மனதிற்கு ஒரு இதம அளிக்கும் டானிக். இந்த கலை மறைந்து போக்காமல் இருக்க இறைவன் அருள் புரிய வேண்டும்.

amas32

பூங்குழலி said...

ஆமாம் நாம் நினைத்தபடியே அழகாக வரும் கோலத்திற்கு நிகர் ஏதும் இல்லை .அந்த கலையையும் அந்த சந்தோஷத்தையும் நாம் நிச்சயம் இழந்துவிடக் கூடாது