Wednesday 25 August 2010

குதிரைவால் முதல் எலிவால் வரை

ரெண்டு பேரு வந்து சாபம் கொடுத்திட்டு போன உடனே ..தினம் காலையில எழுந்ததும் நா தொட்டு பார்க்கிறது என் தலைய தான்.நல்ல வேளை டோப்பா வைக்கிற அளவுக்கு நிலைமை மோசமாகலை ,அதோட புழுவும் வைக்கலை .
இப்ப கேசவர்த்தினிக்கு வருவோம் .கேசவர்த்தினி போட்டவுடனே என்னோட தல முடி மட்டுமில்ல இத கேட்டுட்டு போட்டுகிட்ட பக்கத்து வீட்டு பூஜா ...ஐயோ சாரி ,எங்க பக்கத்து வீடு பொண்ணு ரெண்டு பேருக்குமே எக்கச்சக்கமா கொட்டிப் போச்சு .இத சரி பண்ண முள்ள முள்ளால எடுக்கிற மாதிரி டாம்காலுக்கு மாறினோம் .தலையில தடவுனா யாருமே நம்ம பக்கத்துல நிக்க முடியாது .அப்படி ஒரு நறுமணம் ,நிறைய மூலிகை சேர்த்திருக்காங்கள் ல அதோட மகிமை .இதுல கொஞ்சம் பரவாயில்லை ....

இப்ப நா ஹையர் செகண்டரி வந்துட்டேன் .எல்லோரும் ஸ்டைலா ஒத்த ஜட போட்டுட்டு வரும் போது ,நா மட்டும் ரெண்டு ஜட தான் .அதே எண்ணெய் அதே மடிச்சு கட்டின அதே நுனி வரைக்கும் ரிப்பன் வச்ச அதே ஸ்டைலு தான். நமக்கு எப்பவும் சொல்லும் ஒண்ணு ஸ்டைலும் ஒண்ணு...:)கிளாசுல " ஒரு நாளிக்காவது ஒத்த ஜட போட்டுக்கிட்டு வாயேன் ன்னு "எத்தனையோ பேர் கேட்டும் ,ம்ஹூம் ...நாங்க மாற மாட்டோம் ல்ல . எங்க ஸ்கூலில ஒரு ஜியாகிரபி மிஸ் இருந்தாங்க .யாராவது ரிப்பன் இல்லாம வந்தா ,கையில இல்ல தரையில கிடக்கிற நாரு ,சனல் ன்னு எதையாவது கட்டி விட்டுருவாங்க .அன்னிக்கி பூரா அதோடயே திரியனும் .அதனால வேற ஸ்டைல் பண்றதுக்கு வாய்ப்பு குறைவு தான் .


ஸ்கூல் முடிச்சு ,காலேஜும் சேர்ந்தாச்சு .இங்க நெனைச்சாப்புல ஸ்டைல் பண்ணலாம் .முடியும் கனிசமா கொறஞ்சு தான் போச்சு (ரொம்ப படிச்சதால ?!?).இங்க நிறைய பேரு "முடிய ட்ரிம் பண்ணி விடு அடியில ஈவனா இல்ல ,"அப்படின்னு பல மாதிரியா தூபம் போட்டு பாத்தாங்க (ஒரு பொறாமை தான் ).ஆனா இப்படி ட்ரிம் பண்ணினவுங்க பல பேரோட கூந்தல் ஆப்பம் பங்கு போட்ட பூனை கதையில போல ஒண்ணுமில்லாம போனதை பார்த்திருந்த நான் ,அசரவே இல்ல .

அப்புறம் கல்யாணம் ஆச்சு .வீட்டுக்காரர் சொன்னாருன்னு ஒரு தடவை முடிய வெட்டிட்டேன் .ஒரு கொண்டை போடுறதுக்கு கூட ஒரு சுத்து வரலை .எங்க மாமியார் (அவங்களுக்கு மூணு மருமகள் ல எனக்கு தான் அவங்கள மாதிரி நீள கூந்தல் ன்னு கொஞ்சம் பெருமை ,அதான் ),எங்க சித்தின்னு (இவங்களுக்கு அவங்க பலம் +அழகு அவங்க கூந்தல்ல தான் இருக்குன்னு நெனப்பு ) நிறைய பேரு கிட்ட திட்டு வாங்கினது தான் மிச்சம் .அதுக்கப்புறம் தான் யார் என்ன சொன்னாலும் சரி முடி கிட்ட கூட கத்திரிகோல் கொண்டு போக கூடாதுன்னு சபதம் ? செஞ்சேன் .

இதுக்கப்புறம் குழந்தை முகம் பார்க்கிறப்ப முடி கொட்டும் அப்படி இப்படிங்கற நிறைய மூட நம்பிக்கைகளைஎல்லாம் கூட தாண்டி என் முடி இன்னமும் அடர்த்தியா இல்லைன்னாலும் நீளமாவாவது இருக்கு .நல்ல வேளை நிறைய இருந்தப்பவே நல்லா ரெட்டை ஜடை போட்டு அனுபவிச்சாச்சு ன்னு தோணும் .இதுக்குன்னு பெரிசா எதையும் செய்யறது இல்லை .முடி வளரதுக்கு டிப்ஸ் ன்னு எங்காவது படிக்கும் போதெல்லாம் எனக்கு என்னோட தோல் டாக்டர் ஒரு தடவை சொன்னது தான் ஞாபகம் வரும் ,"நீ என்ன செஞ்சாலும் ,அது கொட்டனும் இருந்தா கொட்டி தான் தீரும் ."


என்னோட பேஷண்ட்ஸ் யாராவது ,எனக்கு ரொம்ப முடி கொட்டுது ஏதாவது மருந்து எழுதி கொடுங்க ன்னு சொன்னா ,நா சொல்ற ஒரே பதில் இதுதான் ,"அப்படி ஒரு மருந்து இருந்தா நானே சாப்பிட மாட்டேனா ?"


9 comments:

myl said...

good this is real life story
http://bit.ly/9NGf6i

myl said...

http://www.tutorialsscripts.com/free-social-networking-icons/free-icons-facebook.php

எண்ணங்கள் 13189034291840215795 said...

நகைச்சுவையா எழுதியிருக்கீங்க..

ஆனா முடி கொட்டும்போது என்னமோ உசிரே போற மாதிரிதான்..

எனக்கு 8ம் வகுப்பில் டைபாய்ட் வந்தபோது மொட்டை அடிக்கும் விசேஷத்துக்கு ஊரே கூட்டியிருந்தது என்னிடம் மாட்ட்டும் சொல்லாமல்..

நானும் அங்கிங்கு ஓடி சுவர் ஏறி பார்த்தும் தெருவிலுள்ல அண்ணா'ஸ் லாம் பிடிச்சு இழுத்ட்து வந்து மேடிஅயில் உட்கார வெச்சு,...க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

மொய் எழுதி , பந்தி மட்டும் தான் போடலை..:))

அப்புரம் வளர்ந்தது பாருங்க அபார வளர்ச்சி.. முட்டிக்கும் கீழே அடர்த்தியாய்..

அதுக்கும் வேஎளை வந்தது பொறியியல் கல்லூரி வாத்தியார் வடிவில்..

உன் முடி மெஷினுக்குள் சிக்கும் னு சொல்ல, அம்மாவிட்டம் சொல்ல ,
எனக்கு தெரியாமலே அம்மா முடியை இடுப்பு வரை வெட்ட , என்னைவிட என் எதிர்த்த வீட்டு அக்கா அழுதது நியாபகம் வருது..

ம். நல்ல பதிவுங்க..

பூங்குழலி said...

நன்றி மைல் (myl )?

பூங்குழலி said...

மொய் எழுதி , பந்தி மட்டும் தான் போடலை..:))

அப்புரம் வளர்ந்தது பாருங்க அபார வளர்ச்சி.. முட்டிக்கும் கீழே அடர்த்தியாய்..

ஆமா சாந்தி மொட்டை அடிச்சா முடி நல்லா வளரும்னு சொல்றாங்க ..உண்மை தான் போலிருக்கு .
லேசான்ன விஷயமா தெரிஞ்சா கூட ,முடி கொட்டி போனா முகமே மாறிப் போறதால பெரிய விஷயம் தான் .நிறைய பேஷன்ட்ஸுக்கு இதுவே அதி முக்கியமான பிரச்சனையா இருக்கும் .

Unknown said...

Hi,

Your writings are great..

Is it Dr.Poonguzhali Who lived in T.AnnaNagar and worked for AAkash fertility center Chennai?

If yes Please give your contact details

Regds
9551257676

பூங்குழலி said...

மிக்க நன்றி அப்துல் . நீங்கள் நினைக்கும் டாக்டர் .பூங்குழலி நான் இல்லை

ரசிகன் said...

//முடியும் கனிசமா கொறஞ்சு தான் போச்சு (ரொம்ப படிச்சதால ?!?)//
ஹா ஹா

பூங்குழலிக்கு பெயர் காரணம் அருமை.

பூங்குழலி said...

உங்கள் வருகைக்கு ரொம்ப நன்றி ரசிகன்