Thursday, 21 October 2010

என்ன விலை அழகே

ஆறே வாரத்தில் மின்னிடும் சிகப்பழகு !,
அப்ப எங்கூரு எருமை மாட்டுக்கு பூசுங்களேன் ,ஆறு வாரத்துல கூட வேண்டாம் ,ஆறு மாசத்துலேயாவது செகப்பாகுதான்னு பாப்போமே !!!!!!"
இது ஒரு பட்டிமன்றத்துல கேட்டது .

ஒரு நாள் ,வேண்டாம், ஒரு மணி நேரம் டி வி பாத்தா அதுல எத்தனை அழகு பொருட்கள் விளம்பரம் ?நீண்ட கூந்தலுக்கு ,பளபளப்பான கூந்தலுக்கு ஆரோக்கியமான கூந்தலுக்கு ,ஆரோக்கியம் +பொலிவான கூந்தலுக்கு ன்னு தொடங்கி சிகப்பழகுக்கு ன்னு ஆசை காட்டி ,சரும பராமரிப்புக்கு ன்னு எத்தனை எத்தனையோ .பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கு கூடத் தான் (வழுக்கை தலையில இருக்கிற நாலு முடிய நாலு மணிநேரம் செட் பண்றவுங்க அவுங்கன்னு விளம்பரம் பண்றவங்களுக்கு தெரியாதா என்ன ?)

அழகா இருக்கணும்ங்கறது எல்லாருக்கும் ஆசைதான் .இல்லைன்னு அடிச்சு சொல்றவுங்க கண்டிப்பா பொய் சொல்றாங்க .."என்ன விலை அழகே",அழகுக்கு மறுபெயர் பெண்ணாலிருந்து.."நெறைய கவிஞர்கள் பாடினது அழகைத்தான் (அவள் அப்படி ஒன்றும் அழகில்லை ன்னு எழுதினவரை தவிர்த்து ).பெண்ணியம் ,அடுக்களை மட்டுமே பெண்களுக்கா ?பெண்கள் அலங்காரப் பதுமைகளா ?அப்படினெல்லாம் எழுதிட்டு அழகு குறிப்புக்கள் +சமையல் குறிப்புகள் இல்லாத பெண்கள் பத்திரிக்கை தான் இருக்கா ?

படிக்கட்டுல ஓடி வந்தா பின்னாலேயே துள்ளி வர கூந்தல் ,மூச்சு பட்டாலே சிவக்கிற நிறம் ,பக்கத்துல நின்னா எதிர இருக்கவுங்க முகம் காட்டுற கண்ணாடி சருமம், இது எல்லாமே எட்ட துடிக்கிற ஆசைகள் தான் .சாத்தியமாகுதோ இல்லையோ முயற்சியாவது பண்ணாம யாராவது இருந்திருக்காங்களா என்ன?
நான் சின்னப் பிள்ளையா இருந்தப்ப ,பயத்தம் பருப்பு மாவு தேச்சு குளி,இல்ல கடலை மாவு தேச்சு குளி இதுதான் உச்சகட்ட அழகு குறிப்பா இருக்கும் .ஸ்கூல என் கிளாஸ் மேட் ஒருத்தி ஐய்ப்ரோ பண்ணிட்டு வந்துட்டா ,எச்.எம் வரைக்கும் கூப்பிட்டு திட்டி பெரிய பிரச்சனை ஆச்சு அப்ப .அப்புறம் காலேஜ் வந்தப்ப
பியூட்டி பார்லருக்கு எல்லாரும் போகலாம் .,அது ஒண்ணும் தப்பில்லைங்கற அளவுக்கு பியூட்டி பார்லர் சகஜமாச்சுன்னு ன்னு சொல்றத விட அத்தியாவசியமானதாச்சு .

முதல் முதல்ல ஐய்ப்ரோ பண்றதுக்கு தான் பியூட்டி பார்லர் போயிருந்தேன் .ரொம்பவே கூச்சமா இருந்துச்சு .த்ரெடிங் பண்ணின உடனே கண்ணிலிருந்து தண்ணியா கொட்டிச்சு (கண்ணிலே நீர் எதற்கு ?த்ரெடிங்கப்போ அழுவதற்கு?),எரிச்சல் வேற .வீட்டுக்கு போனவுடனே ஐஸ் வைங்க ன்னு சொல்லி அனுப்பினாங்க .வீட்டுக்கு வந்து பாத்தா புருவம் வடிவமா நளினமா இருந்துச்சி .முகமே பளிச்சுன்னு களை எடுத்த மாதிரி இருந்துச்சி . அப்புறம் பேஷியல் ,ஸ்கால்ப் மசாஜ் ன்னு பியூட்டி பார்லர் நல்லா பழக்கமான இடமாயிருச்சி .

முன்னெல்லாம் பியூட்டி பார்லர் போனா ,நாம சொன்னத செஞ்சுட்டு விட்டுருவாங்க .பேஷியல் பண்ணா முகம் இன்னும் பளிச்சுன்னு இருக்குமேனெல்லாம் லேசா சொல்லிப் பாத்துட்டு தான் .இப்பெல்லாம் ,என்ன செய்யனும்ன்னு முடிவு பண்ணாம உள்ள போறவுங்க கத கந்தல் தான் .முதல்ல ஹோட்டல் மாதிரி ஒரு மெனு கார்ட் கொடுக்குறாங்க .பேஷியல்ல பத்து வகை ,பெடிக்யூர்ல நாலுன்னு படிச்சாலே கண்ணக் கட்டிரும் .அதிலேயும் ரேட் குறைவா ஒண்ண சொல்லிட்டோம்ன்னா உடனே அது உங்களுக்கு சூட் ஆகாது மேடம் ன்னு ஏதாவது தலைய சுத்த வைக்கிற விலையில ஒண்ண சொல்லுவாங்க .

இது போதாதுன்னு ஸ்கின் லைட்டனிங் ,வார்ட் ரிமூவல்ன்னு காஸ்மெட்டாலஜிஸ்ட் செய்ய வேண்டியதெல்லாம் இவங்களே செய்யறாங்க .விதவிதமான கிரீம்கள் விற்பனை வேற . இப்ப புதுசா யூனிசெக்ஸ் சலூன் வேற வந்திருக்கு .நேத்து டி நகர் பக்கம் ஹேர் ஸ்டூடியோ ஒண்ணு இருந்துச்சி .இப்படியே போனா ,ஹேர் ,ஹான்ட் ,புட்ன்னு தனித்தனியா ஸ்டூடியோ ஆரம்பிச்சுடுவாங்க போல .டி வியில வேற நிறைய பியூட்டிஷியன்ஸ் வந்து லைவா சந்தேகத்திற்கு பதில் சொல்றாங்க .சில பல இல்லத்தரசிகள் வேற பியூட்டிஷியன் கோர்ஸ் படிச்சிகிட்டு வீட்டிலேயே சின்னதா பார்லர் ?? நடத்துறாங்க .

பிரைட்டல்ல நல்ல வருமானம்ன்னு நினைக்கிறேன் .மூணு நாளைக்கு கல்யாணப் பொண்ண குத்தகைக்கு எடுத்துக்குறாங்க .மெகந்தி லிருந்து நெத்தி சுட்டி வரைக்கும் வைச்சு விடுறாங்க .சும்மா சொல்லக் கூடாது ,நல்லாவே அலங்காரம் செஞ்சு விடுறாங்க ,உடைக்கு ஏத்த மாதிரி ,பொண்ணுக்கு ஏத்த மாதிரின்னு .
மொத்தத்துல பாத்தா பியூட்டி பார்லர் நடத்துறவங்களுக்கு ஓரளவு நல்ல வருமானம் தான் போலிருக்கு .

இப்ப, என்ன விலை அழகேன்னு கேட்டா ?"உங்க வசதிக்கு ஏற்ற விலையில கிடைக்குது ன்னு சொல்லத் தோணுது "(ஹப்பா ,டைட்டில சொல்லியாச்சு )


6 comments:

துளசி கோபால் said...

சூப்பர்!!!!

பூங்குழலி said...

சூப்பர்!!!!ரொம்ப நன்றி ...சட்டுன்னு நீங்க சொன்ன சூப்பருக்கு

எஸ்.கே said...

அருமை! வாழ்த்துக்கள்!

பூங்குழலி said...

நன்றி எஸ்.கே

கவிநா... said...

அக்கா நான் ரொம்ப late entry இந்த பதிவுக்கு...
நான் இன்னும் கூட beauty parlour போனதில்லை. உங்க பதிவைப் படிச்சதும், போக சொல்றீங்களா, போக வேண்டாம்னு சொல்றீங்களா னு புரிஞ்சுக்க முடியாம குழம்பிட்டேன்.

ஆனா இடை இடையே உங்க காமெடி இருக்கே!. சூப்பர்....

பூங்குழலி said...

கண்டிப்பா இஷ்டமிருந்தா போகலாம் .ஆனா போறதுக்கு முன்னாடி எதுக்காக போறோம்ங்கறத சரியா முடிவு பண்ணிட்டு போகணும் .இல்லைன்னா தீட்டிருவாங்க ...

போகனுமா வேண்டாமான்னு
சொல்றது பதிவோட நோக்கம் இல்ல .என்னோட அனுபவத்த சொல்றது தான்

நன்றி கவிநா