முதன் முதலாக எச் ஐ வி இருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சைக்கு வரும் பலரும் கேட்கும் ஒரே கேள்வி இதுதான் ,"நோய் இல்லாம பண்ண மருந்து வந்திரும்ல ,எப்ப வரும் ?"இதை கேட்காத நோயாளிகள் கிடையவே கிடையாது .
இதோடு இது தொடர்பாக பத்திரிக்கைகளில் செய்திதாள்களில் வரும் அத்தனை செய்திகளையும் வெட்டி எடுத்துக் கொண்டும் வருவார்கள் ."இப்படி போட்டிருக்கிறதே ,இந்த மருந்து சாப்பிட்டு சரியாகும் என்று எழுதியிருக்கிறதே ?இது எங்கள் ஊரில் மிகவும் பிரபலமான பத்திரிகை ,இதில் போட்டிருந்தால் சரியாக இருக்கும் ,"என்றெல்லாம் நம்பிக்கையை மனதில் ஏந்திப் பிடித்துக் கொண்டு வருவார்கள் .
இன்னும் சிலர் ,நாங்கள் எச் ஐ விக்கு மட்டுமான பிரத்தியேக மருத்துவமனையாக இருப்பதால் நோய் ஒழிக்கும் மருந்து வந்தால் அது எங்கள் வருமானத்தை குறைக்கும் ,அதனால் நாங்கள் அதை கொடுக்காமல் போகக் கூடும் என்று முடிவு செய்துகொண்டு ,நாசூக்காக ,"அப்படி நோய் இல்லாமல் செய்வதற்கு மருந்து வந்தால் நீங்கள் கொடுப்பீர்கள் தானே? இந்த நோய்க்கு மருந்து வந்து விட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள் ?" என்று கேட்டு வைப்பார்கள் ."வேறே நோய்க்கு வைத்தியம் பார்க்க போவோம் .ஆனால் உங்களுக்கு கண்டிப்பாக மருந்தை தருவோம் ,"என்று சளைக்காமல் நாங்களும் பதில் சொல்லுவோம் .
எல்லாருக்கும் நாங்கள் சொல்லும் பதில் அனேகமாக ,"ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன .கண்டிப்பாக அவை வெற்றி பெற்று மருந்து வரும் .அதற்கு இன்னமும் மூன்று அல்லது ஐந்து ஆண்டுகள் வரை ஆகலாம் .அதுவரை உங்கள் மருந்துகளை தொடர்ந்து சாப்பிடுங்கள் ,தொடர்ந்து செக் அப்புக்கு வந்து கொண்டிருங்கள் "என்பதே .
போன மாதத்தில் வந்த ஒரு பெண் எல்லாம் கேட்டுவிட்டு சொன்னார் ,"கம்ப்யூட்டர்ல வைரஸ் வந்தா ஏதோ ஆன்ட்டி வைரஸ் சிடி போட்டு அத எடுத்திடுறாங்களே ,அதமாதிரி இதையும் அந்த மாதிரி ஏதாவது போட்டு எடுக்கக் கூடாதா ?"
Monday, 14 March 2011
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
>>போன மாதத்தில் வந்த ஒரு பெண் எல்லாம் கேட்டுவிட்டு சொன்னார் ,"கம்ப்யூட்டர்ல வைரஸ் வந்தா ஏதோ ஆன்ட்டி வைரஸ் சிடி போட்டு அத எடுத்திடுறாங்களே ,அதமாதிரி இதையும் அந்த மாதிரி ஏதாவது போட்டு எடுக்கக் கூடாதா ?"
அறிவுக்கொளுந்து
அறிவுக்கொளுந்து
ஏதாவது ஒரு மருந்து கொடுத்து இந்த நோய் இல்லாமல் செய்து விடக்கூடாதா என்ற ஆதங்கம் தான்
:-( **Sigh**
ஆமாம் சந்தனமுல்லை , வருத்தம் தான் .....ஆனாலும் சரியாக சிகிச்சைக்கு வந்து பலர் தங்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வாழ்வதை பார்க்கும் போது
சந்தோஷமாக இருக்கும்
Post a Comment