Tuesday 7 June 2011

என் நினைவுகள்



குப்பைக் கிடங்கென கொட்டிக்கிடக்கின்றன

என் நினைவுகள்

தேவையானவையும் தேவையற்றவையுமாய்

பிரிக்க முடியாமல் 



மங்கி போனதாக நான் எண்ணியிருந்த

சில நினைவுகள்

கிளறிப் பார்க்கையில்

கங்கென கனன்று கைசுடுகின்றன .

இன்னும் சுடுமோ என்றெண்ணி

சிலவற்றை அண்டாமல் இருக்கிறேன்

என்றோ தவறி தொடும் போது

ஆறி உணர்வு தீண்டாமல் கிடக்கின்றன அவை .



சிலவையோ சந்தோஷங்கள் ஏந்தி

சிறகடித்துக் கொண்டிருக்கின்றன

இவற்றை தக்கவைத்து பிறதை

கழிக்க முடியாமல் திணறியே

இன்னமும் சேர்க்கிறேன் .

தானாக மக்கி போகும்

என்று சுமந்துகொண்டே காத்திருக்கிறேன்

இருக்க முடியாமலும் வெளியேற இயலாமலும்

பந்துக்குள் காற்று போல

சுற்றிக் கொண்டேயிருக்கின்றன அவை .



இவை அத்தனைக்கும் அடியில்

நீண்ட கருநாகம் போல

அடைந்துக்  கிடக்கிறது ஒன்று  மட்டும்,

அகற்ற முடியாததாய் .

வேறெந்த நினைவின் சீண்டலுக்கும் அசையாமல்

செத்தது போல பாசாங்கு செய்து கொண்டு.

என்றேனும் நான் அதை கவனியாது

போனால் மட்டும்

புஸ்சென்று    தலைதூக்கி

எனை கொத்துவதாய் பாவித்து

மீண்டும் சுருண்டு கொள்கிறது .

என்றேனும் ஒருநாள் பெரிதாய் படமெடுக்க...









10 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அருமையான சிந்தனை...

கவிதை விதமும் அருமை...
வாழ்த்துக்கள்..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

/////
மங்கி போனதாக நான் எண்ணியிருந்த

சில நினைவுகள்

கிளறிப் பார்க்கையில்

கங்கென கனன்று கைசுடுகின்றன . ////


எல்லா மனிதர்களின் நெஞ்சிலும் இந்த கங்கு காத்துக்கொ்ணடிருக்கிறது சுடுவதற்க்கு...

Anonymous said...

வரிகள் அருமையாக உள்ளன...

பூங்குழலி said...

எல்லார் நெஞ்சிலும் பல கங்குகளும் குப்பைகளும் சந்தோஷங்களும் கலந்தே கிடக்கின்றன .மறக்க முடிப்பவர்கள் பாக்கியவான்கள் .


நன்றி சௌந்தர்

பூங்குழலி said...

நன்றி சதீஷ்குமார்

Yaathoramani.blogspot.com said...

அருமையான கவிதை
அனைவருக்குள்ளும் அந்த கரு நாகம்குப்பையோடு குப்பையாய்
இருப்பிடம் தெரியாதும் எப்போது சீறும் என புரியாதபடியும்
பயமுறுத்திக்கொண்டும்தான் உள்ளது
குப்பையை அகற்றினால் ஒருவேளை
வெளியேறக்கூடும் என்றாலும்
குப்பைகளுடனான பரிச்சியமோ இல்லை
சோம்பேறிித்தனமோ கரு நாகத்தின் இருப்பை
உறுதிசெய்துகொண்டுள்ளது
நல்ல சிந்தனைகளை தூண்டிச் செல்லும் அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்

பூங்குழலி said...

நன்றி ரமணி அவர்களே

குடந்தை அன்புமணி said...

ஜூலை மாத இன்ப அதிர்ச்சி என்ன? http://thagavalmalar.blogspot.com/2011/07/blog-post_05.html

rajamelaiyur said...

வலைசரத்தில் உங்களை பற்றி எழுதி உள்ளேன் நேரம் இருந்தால் பார்க்கவும்

கூட்டான்சோறு...

பூங்குழலி said...

உங்கள் அறிமுகத்திற்கு நன்றி- "என் ராஜபாட்டை" ராஜா