Wednesday, 5 October 2011

என் மௌனம்








சொற்களால் நிரம்பியிருக்கின்றன

என் மௌனங்கள்

சொற்கள் தவிர்த்து

சில புன்னகைகளும்

கேலி சிரிப்புகளும் கோபங்களாலும் கூட




பல நேரங்களில்

பல்லிடுக்குகளில் வழியே

மௌனம் தப்பி

வெளியேறுகின்றன சொற்கள் .



சில இக்கட்டுகளில்

பயந்தோடும் சொற்கள்

தொண்டைக்குழியில் பதுங்கி

மௌனத்தில் ஒளிகின்றன .



கதவுகள் அடைத்து

சாவி தொலைத்து

அவற்றை சிறை வைத்திருக்கிறது

மௌனம் .



விழுங்கப்பட்ட சொற்கள்

வேதனையில்

மௌனம் பிராண்டிக் களைக்கின்றன .



ஓய்ந்து போய்

மீண்டும் மீண்டும்

மௌனத்தில் கரைகின்றன .



என்றேனும் ஒருநாளில்

பேரிரைச்சலாய்

அவை சிறை தகர்க்கக் கூடும் .

அந்நாளில்

வெடித்து வெளியேறும்

சொற்களுடன் என் மௌனமும் .....







6 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

//அந்நாளில்

வெடித்து வெளியேறும்

சொற்களுடன் என் மௌனமும் ..//

அருமையான முடிவு!:))

-தோழன் மபா, தமிழன் வீதி said...

வார்த்தை வசப்படும் நல்லதொரு கவிதை. மென்மையான சொல்லாடல், வாழ்த்துகள்!

பூங்குழலி said...

அருமையான முடிவு!:))





பாராட்டுக்கு நன்றி அய்யா

பூங்குழலி said...

மனதை வருடும் உங்கள் பாராட்டுக்கு நன்றி தோழர் மபா

ஸ்டாலின் குரு said...

அருமை ......

பூங்குழலி said...

நன்றி ஸ்டாலின் குரு