நன்கு பரிச்சயமான நோயாளி தான் .தொடர்ந்து சிகிச்சைக்கு வருபவர் .மாத்திரைகளை சமீபத்தில் மாற்றியிருந்தேன் .
உடல் நலம் பற்றி பேசிக் கொண்டே இருக்கையில் ,"எனக்கு வரவர அதிகமா கோவம் வருது .வீட்டிலேயும் எங்கிட்ட வேல பாக்கிறவங்க கிட்டேயும் ரொம்பவே கோபப்படுறேன் .யாராவது நா சொன்னத சொன்னபடி செய்யலைன்னா நெறைய கோவம் வருது .இது புது மாத்திரையாலா ?எப்படி இந்த கோவத்த கொறைக்கலாம் ? "என்றவுடன் ." யார்கிட்டயாவது அடி வாங்கினா கோவம் தானா கொறையும் "என்றேன் விளையாட்டாக .
கண்ணில் நீர் வரும்வரை சிரித்தவர் ,"நா சாவற வரைக்கும் இத மறக்க மாட்டேன் "என்று சொல்லிவிட்டு போனார் .
15 comments:
சிறிய குட்டியூண்டு கதையில் நல்ல ஒரு அறிவுரை. பாராட்டுக்கள்.
கதையில்லை நிஜம் ...
உங்கள் பாராட்டுக்கு நன்றி அய்யா
நல்ல நகைச்சுவை உணர்வு மிக்கவர். நீங்கள் மட்டுமல்ல நோயாளியும்தான். இல்லாவிட்டால் நீங்கள் "மறக்காத" நிகழ்வாயிருக்கும்.
நீங்கள் சொல்வது ரொம்பவும் சரி சக்திவேல் ...நோயாளி நாங்கள் நன்கு அறிந்தவர் என்பதாலே இப்படி பேச முடிந்தது ..இல்லையென்றால் வேறு ஆலோசனை சொல்லியிருப்பேன்
:)
"நல்லா... உறைக்கிறமாதிரி அடிச்சி சொல்லியிருக்கீங்க!"
புன்னகை பதிந்ததற்கு நன்றி ஸ்டாலின் குரு
நல்லா... உறைக்கிறமாதிரி அடிச்சி சொல்லியிருக்கீங்க!"
அடிக்காம மெதுவா தான் சொன்னேன் ...
தனக்கு கீழ் இருப்பவர்கள் மேல் வரும் தேவையில்லாத கோபம் நியாயமில்லாதது தானே ...
//தனக்கு கீழ் இருப்பவர்கள் மேல் வரும் தேவையில்லாத கோபம் நியாயமில்லாதது தானே ...//
Simply Super!
வணக்கம் அக்கா, நலமா?
நகைச்சுவை நோய்களைக் குறைக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டாய் அனுப ரீதியான உதாரணத்தினைப் பகிர்ந்திருக்கிறீங்க.
ரசித்தேன்.
வணக்கம் நிரூபன் ,நான் நலமே .நீங்களும் நலம்தானே ?
எல்லா நோயாளிகளிடமும் நகைச்சுவை எடுபடாது ....இவரிடம் பலித்தது
ஹா ஹா ஹா ஹா சரியான பதில்தான், இனி அவர் கோபப்படும் போதெல்லாம் இதை நினைச்சி சிரிக்கப்போறார்..!!!
அப்படியாவது அவர் கோபம் குறைஞ்சா சரிதான்
நன்றி மனோ
கோபத்திற்கு சரியான மருந்து கொடுத்தீர்கள் போங்கள்... :)
வாழ்த்துகள்
கோபத்திற்கு மனமாற்றத்தை தவிர்த்த மருந்து உண்டா என்ன ?
Post a Comment