Monday 31 October 2011

மழை

                                                              





இந்நாளில் ,
என்னுடன் கண்ணாமூச்சி
விளையாடுகிறது மழை
மேகங்களுள் ஒளிவதும்
வெளியே தெரிவதுமாக ...

மின்னலென சிரித்து
பரிகாசம் செய்கிறது
வானவில்லை அழித்துவிட்டு
அழுவதாக நடிக்கிறது

குடைக்குள் ஒளிவதும்
வெளியே வருவதுமாக
கண்ணாமூச்சி விளையாடுகிறேன்
மழையுடன் நானும்

நான் ஏமாந்த
பொழுதொன்றில்
ஹோவென சிரித்து
என்னை இறுகப் பிடித்தது மழை

சினந்ததாய் போக்குக் காட்டி
சிலிர்த்து நனைகிறேன்
கால்வரை கிச்சலம் காட்டி
கண்ணைக் கட்டுகிறது

"மழை பொழிந்து கொண்டே இருக்கும்"
எங்கோ பாடுகிறது
எவரின் வானொலியோ ..
உடல் ?
அட ,நனைந்து கொண்டே தான் இருக்கட்டுமே !



படத்திற்கு நன்றி :http://photobucket.com/images/girl+in+rain/


8 comments:

rajamelaiyur said...

//
மின்னலென சிரித்து
பரிகாசம் செய்கிறது
வானவில்லை அழித்துவிட்டு
அழுவதாக நடிக்கிறது
//
அருமையான வரிகள்

முனைவர் இரா.குணசீலன் said...

மழையில் நானும் கொஞ்சம் நனைந்தேன்..

முனைவர் இரா.குணசீலன் said...

இலக்கிய மழையில் நனைய
தங்களை அன்புடன் அழைக்கிறேன்..


http://gunathamizh.blogspot.com/2011/10/blog-post_29.html

பூங்குழலி said...

நன்றி என் ராஜபாட்டை"- ராஜா

பூங்குழலி said...

நீங்களும் மழையில் நனைந்தது கண்டு மகிழ்ச்சி குணசீலன்

பூங்குழலி said...
This comment has been removed by the author.
வை.கோபாலகிருஷ்ணன் said...

கவிதை மழையில் நனைய வைத்து விட்டீர்கள். நன்றி. பாராட்டுக்கள்.

பூங்குழலி said...

உங்கள் பாராட்டில் நான் நனைந்து போனேன் ..நன்றி ஐயா