Friday, 4 November 2011

மழை

                                      
                                                                         
வெயில் களவாடிப்  போயிருந்தது
என் மழையை .....
மேகங்களுள்
அதை பதுக்கி வைத்திருக்கக் கூடும்
ஒருவேளை மலைகளின்
பின்னால் கூட ....




காண சகியாமல்
கண்மூடி பயணிக்கிறேன்
என்னைப் பார்த்து
எக்காளமாய் சிரிக்கிறது வெயில்
எங்கென தேடுவாய் என
ஏளனம் செய்கிறது

மலை ஏற முடியாமல்
மேகம் எட்ட வழியின்றி
மின்னல் வரும் திசை பார்த்து
காத்துக் கிடக்கிறேன்
ஒரு துளியேனும் ... என
ஏக்கம் சுமக்கிறேன்

எவர் சொல்லி தெரிந்ததோ...
என் குறிப்புணர்ந்து
இடியால் மேகம் இளக்கி
என் கைப்பற்றி
பெரும் பிரவாகமாய்
பொழிந்தது
என் பூமியெங்கும் மழை....


4 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

மழை பற்றிய அழகானதொரு கவிதையை, மழையெனப் பொழிந்து, மகிழ்ச்சியில் ஆழ்த்திவிட்டீர்கள்.

பாராட்டுக்கள்.

பால கணேஷ் said...

ஹை... நீங்களும் என்னைப் போல் மழைப் பிரியையா... அருமையாக வடித்திருக்கிறீர்கள் நற்கவிதை. மனமார்ந்த பாராட்டுக்கள்.

பூங்குழலி said...

உங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றி வை கோ அய்யா.....

பூங்குழலி said...

நீங்கள் ஹை என்று சொன்னதிலேயே நீங்களும் என்னைப் போலவே மழைப் பிரியர் என்று தெரிந்து கொண்டேன் ...நற்கவிதை என்ற உங்களின் பாராட்டில் மனம் நிறைந்தது .மிக்க நன்றி