Friday 25 November 2011

மழை






ஏதுமில்லா வெறும் வானம்
உற்றுப்பார்க்க ஒன்றுமில்லாமல் ...
எங்கோ கைகாட்டும் சில நட்சத்திரங்கள்
அரை மனதாய் நிலா
கால் நீட்ட நாற்காலி
பிசுபிசுத்த செய்திகள்
போகாத பொழுது
ருசிக்காத உணவு
செய்ய ஏதுமில்லா அந்த
வெற்று பொழுதில்
எங்கிருந்தோ ......
வானம் பிரட்டி
கருமை பூசி
மேகம் நிறைத்து
என் உயிர் எழுப்பி
நா நனைத்து
தேனென இனித்தது மழை


13 comments:

பால கணேஷ் said...

எனக்கும் தேனென இனிக்கிறது மழை. ஆனால் முதல் நாள் ரசித்தும், அடுத்த இரு நாட்கள் சலித்துக் கொண்டும், அடுத்த நாட்களில் மழையை சபித்துக் கொண்டுமிருக்கும் உலக இயற்கைக்கு மாறாய் இருக்கிறாயேடா... என்னும் அம்மாவிற்கு என்ன பதில் சொல்ல தோழி! என் ரசனைக்கேற்ற அருமையான கவி வழங்கிட்டமைக்குப் நன்றிகள் பல.

வை.கோபாலகிருஷ்ணன் said...

மழையெனப் பொழிந்து மகிழ்வூட்டிய கவிதைக்குப் பாராட்டுக்கள். vgk

தென்காசித் தமிழ்ப் பைங்கிளி said...

மழை எல்லோரையும் கவி எழுத வைத்து விடுகிறது.. மனதையும் நிரப்பிவிடுகிறது .மழைக்கும் நன்றி..பாடிய புலவர் பூங்குழலிக்கும் நன்றி

பூங்குழலி said...

அவர் கவலை அவருக்கு .காயாத துணிகளையும் நீர் தேங்கிய தெருக்களையும் பார்க்கும் போது எனக்கும் மழையை சபிக்கலாம் போலிருக்கிறது சில நேரங்களில் ...உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி நண்பரே

பூங்குழலி said...

மனம் திறந்த உங்கள் பாராட்டுக்கு நன்றி வை கோ

பூங்குழலி said...

மழைக்கும் நன்றி கவிக்கும் நன்றி வாழ்த்திய உங்களுக்கும் நன்றி தென்காசித் தமிழ்ப்பைங்கிளி

Yaathoramani.blogspot.com said...

சலித்துபோன ஒரே மாதிரியான வேலைகளில்
உறவுகளில் நொந்து கிடைக்கையில்
திடுமென வந்த செய்திபோல்
வந்த மழை தந்த கவிதை அருமையிலும் அருமை
தொடர வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

த.ம 3

பூங்குழலி said...

மழை வாழ்த்துகளைக் கூட கவிதையாக்கி வழங்குவது போலிருக்கிறது ...மிக்க நன்றி ரமணி அவர்களே

Kavinaya said...

மழை அழகு!

பூங்குழலி said...

வெகு நாள் சென்று சந்திப்பது மகிழ்ச்சி .நன்றி கவிநயா

-தோழன் மபா, தமிழன் வீதி said...

மழை
சோவென்று தூரும்போது....
கவிதை
இப்படித்தான் சாரலாய்
நம் மீது
படிகின்றது!

கவிதை அருமை.
வாழ்த்துகள்.
visit my blog:www.kavithaiveethi.blogspot.com

பூங்குழலி said...

சாரல் பெருக பெருக வார்த்தைகளும் பொழிவுகளாகின்றன..மிக்க நன்றி தோழர்