Friday 30 December 2011

மீண்டும் மழை

மழை வெறித்திருந்த  சில நாளில்
சில்லென்றே  இருந்தது   வானம்
தாகம் தணியாமல்
அலைந்து கொண்டிருந்தன  தெருக்கள்
எங்கோ ஒளிந்திருந்தன  
பெரும் திரளான மேகங்கள்
சிறகுலர்த்திக் கொண்டன  
காகங்கள்,
வாடிப்போயிருந்தோம்
நானும் செடிகளும் ......
வானம் பார்த்தே காத்துக் கிடந்தோம்
சில சாபங்கள் சொல்லி .
மனமுணர்ந்து
என் முகம் துடைத்து
நான் பெய்யென பெய்தது
மாமழை ......
படம் :நன்றி Google images


12 comments:

பால கணேஷ் said...

அடிக்கடி சொல்லுங்கள் மாமழை பெய்து என்னை மகிழ்விக்கட்டும். மீண்டும் மீண்டும் வந்தாலும் மழையும் மழைக் கவிதைகளும் ரசனையானதுதான். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என் இதயம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்கள் பூங்குழலி!

பூங்குழலி said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள் கணேஷ் .உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி

M.Rishan Shareef said...

நல்லதோர் மழைக் கவிதை சகோதரி.

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனதினிய புத்தாண்டு வாழ்த்துக்கள் :-)

விச்சு said...

அருமை...உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

பூங்குழலி said...

பாராட்டுக்கும் வருகைக்கும் நன்றி ரிஷான் ...இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

பூங்குழலி said...

நன்றி விச்சு !இந்த புத்தாண்டில் உங்கள் உள்ளமும் இல்லமும் செழிக்கட்டும்

-தோழன் மபா, தமிழன் வீதி said...

மழை பெரும் தூறலாய் கவிதையில் இறங்கியிருக்கிறது. கவிதை நன்று வாழ்த்துகள்.

Kavinaya said...

மழை குளிர்ச்சியாக இருக்கிறது :)

இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!

Suresh Subramanian said...

அருமை...நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...

என்னுடைய வலைப்பூ வந்து பாருங்களேன்... www.rishvan.com

பூங்குழலி said...

மழை பெரும் தூறலாய் கவிதையில் இறங்கியிருக்கிறது. கவிதை நன்று வாழ்த்துகள்.

உங்கள் வாழ்த்து என் மனதை நனைத்தது .நன்றி தோழரே

பூங்குழலி said...

இனிய புத்தாண்டு வாழ்த்துகள் கவிநயா !

பூங்குழலி said...

மிக்க நன்றி Rishvan ...