Thursday 2 February 2012

மழைப்பாடல்

மழை உங்களை முத்தமிடட்டும்
மழை உங்கள் நெற்றியில்
வெள்ளி நீர்த்துளிகள் கொண்டு தாளமிடட்டும்
மழை உங்களுக்கொரு தாலாட்டு பாடட்டும் .....
மழை நடைபாதைகளில் நடவா குளங்களை தேக்குகிறது
மழை சாக்கடைகளில் ஓடும் குளங்களை ஆக்குகிறது
மழை ,இரவில் ,எங்கள் கூரை மீட்டி
இனிய இரவுப் பாடலொன்றை இசைக்கிறது
அதோடு ,
மழையை நான் காதலிக்கிறேன்

 

 

April Rain Song

Langston Hughes

Let the rain kiss you
Let the rain beat upon your head with silver liquid drops
Let the rain sing you a lullaby
The rain makes still pools on the sidewalk
The rain makes running pools in the gutter
The rain plays a little sleep song on our roof at night
And I love the rain.


8 comments:

Admin said...

மொழிபெயர்ப்பு சிறப்பு.தங்களது கவிதையை வலைச்சரத்தில் சுட்டிக்காட்டியிருக்கிறேன்.நேரமிருந்தால் பார்வையிடவும்.
http://blogintamil.blogspot.com/2012/02/blog-post_08.html

பால கணேஷ் said...

இந்தக் கவிதையின் ஒவ்வொரு எழுத்தும் எனக்கு மகிழ்வளிக்கும் விஷயம். இந்தக் கவிதையை நான் காதலிக்கிறேன். (காரணம் நீங்கள் அறிந்தது தானே பூங்குழலி)

கீதமஞ்சரி said...

மனம் தொடும் எழுத்துக்களால் நிறைந்த பூச்சரம் மணக்கிறது. இனி தொடர்ந்து வருவேன். வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள்..

பூங்குழலி said...

மீண்டும் நன்றி மதுமதி

பூங்குழலி said...

நீங்கள் இந்த கவிதையை மழையின் காரணமாகவே காதலிக்கிறீர்கள் என்று நான் அறிவேன் கணேஷ் ...நன்றி

பூங்குழலி said...

பாராட்டிற்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி கீதமஞ்சரி ..உங்கள் பெயர் மிகவும் அழகானது ...

Avargal Unmaigal said...

ஒரு அழகிய விருதை தங்களுக்கு வழங்கியுள்ளது தொடர்பான இடுகைக்கு வருகை தாருங்கள்
http://avargal-unmaigal.blogspot.com/2012/02/blog-post_10.html

Suresh Subramanian said...

அழகான ஆழமான வரிகள்... நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகி அழகான ஆழமான வரிகள்... நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...www.rishvan.com