கூடங்குளம் ,ஆறு மாதகாலமாக செய்திகளில் அடிபட்டுக் கொண்டே தான் இருக்கிறது .அணு உலைகளுக்கு எதிரான மக்களின் குரலும் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே தான் இருக்கிறது .
காரைக்குடி வரை வந்து ,சிதம்பரம் புகழ் பாடிச் சென்ற பிரதமருக்கு இந்த பிரச்சனை குறித்து வாய்திறக்க மாஸ்கோ போக வேண்டியிருந்தது .தன் அமெரிக்க முதலாளிகளை குளிப்பாட்டி வைத்திருந்த பிரதமர் அன்று மாஸ்கோவில் ,தனக்கு ரஷ்யாவிலும் முதலாளிகள் இருப்பதை வெளிப்படுத்தினார் .
மத்திய அமைச்சர் நாராயணசாமியோ ஏதோ கவுன்ட் டவுன் சொல்லிக் கொண்டே இருந்தார் .இறுதியில் இந்த விஷயத்தில் நேர்மையாக பேசியது இவர் ஒருவரே .
கூடங்குளம் பாதுகாப்பானது என்று ஒரு தரப்பும் பாதுகாப்பில்லாதது என்று மறுதரப்பும் வாதிட்டுக் கொண்டே இருக்கின்றன .மக்கள் மத்தியில் இது குறித்து ஒரு தீர்க்கப்படாத அச்சம் இருந்துகொண்டே இருப்பதன் விளைவாக போராட்டங்கள்( ஆரம்ப காலங்களில் பெரும் ஊடக ஆதரவு கிடைக்காத போதும் )நடந்து கொண்டே இருக்கின்றன .இதில் ஏதும் வன்முறை நிகழ்ந்ததாக தெரியவில்லை .
இதில் முதல் வன்முறையாக அரசு வெளிநாட்டு ஆதரவு என்று பெரும் பூச்சாண்டி காட்டியது .இதுவரை அறியப்படாத ? உண்மையாக தன்னார்வ நிறுவனங்களுக்கு பெரும் தொகை வருவதாக அரசு கூறியது.வெளிநாட்டு நிதியை பெறுவதற்கென்றே இங்கு பலர் தன்னார்வ நிறுவனங்களை பேப்பர் வரையிலேனும் வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று இதுவரை தெரிந்து கொள்ளாமலா இருந்தது இந்த அரசு ?
முதல்வரோ ஒரு அசாதாரண மின்வெட்டை அமல்படுத்தினார் .பின்னர் சாதகமாகவே அறிக்கை தர உருவாக்கப்பட்ட ஒரு குழுவை அமைத்து அதன் அறிக்கையை பெற்றுக் கொண்டார் .ஒப்புக்கு ஆதரவாளர்களையும் சந்தித்தார் .இடைத் தேர்தல் வேலைக்கு மொத்த மந்திரி சபையையும் அனுப்பிவிட்டு ,அது முடியும் வரை காத்திருந்தார் .
இடைத்தேர்தல் முடிந்த மறுநாளே போராட்ட ஆதரவு குழுவினர் கைது செய்யப்படுகின்றனர் .அதைவிட கொடுங்கோன்மையாக சுற்றுவட்டார கிராமங்களில் 144 அமலாக்கப்படுகிறது .ஊரிலிருந்து வெளியேறும் வழிகள் சீல் வைக்கப்படுகின்றன .
முதல்வர் அவர்களே ,
1.உங்கள் குழு அறிக்கை தந்தபடி, அணு உலை பாதுகாப்பானது என்றால் அதை மக்களுக்கு எடுத்து சொல்லாமல் எதற்காக அடக்கு முறையை ஏவிவிட்டீர்கள் ?
2.மக்களை இது குறித்து சந்திக்க நீங்கள் தொடர்ந்து மறுப்பது ஏன் ?
3.போராட்டக் குழுவினரை கைது செய்தது கூட நியாயமில்லை என்றாலும் போர்க்களம் போல போலீசையும் ராணுவத்தையும் மக்களுக்கு எதிராக ஏன் குவித்தீர்கள் ?
4.விலைவாசி உயர்வை டிவியில் வந்து தேனை குழைத்து சொன்ன நீங்கள் இத்தனை பெரிய விஷயத்தில் மக்களுக்கு ஒரு வெறும் அறிக்கையுடன் ஏன் முடித்துக் கொண்டீர்கள் ?
5.உங்கள் குழுவினரின் அறிக்கை உங்களுக்கு சரியென தோன்றியிருந்தால் அதை சொல்ல சங்கரன்கோவில் தேர்தல் முடியும் வரை காத்திருந்தது எத்தனை மலின அரசியல் ?
6 .எதற்கு இழப்பீடு போல திடீரென இத்தனை கோடிகளை ஒதுக்கினீர்கள் ?நன்மை பயக்கும் ஒரு திட்டத்தின் பலனாளிகளுக்கு இவை எதற்காக ?
7.மக்களிடம் பேச தேவையில்லை என்ற அகங்காரத்தை உங்களுக்கு தொடர்ந்து தருவது யார் ?
8.மக்கள் ,வாழ்வு நிலை போராட்டம் போன்றதான ஒன்றை நிகழ்த்திக் கொண்டிருக்கும் போது 500 கோடியை பிடித்துக் கொள்ளுங்கள் என்று சொல்லும் எங்கள் முதல்வரே ,பசியால் வாடிய தன் மக்களிடம் "EAT CAKE " என்று சொன்ன பிரஞ்சு பேரரசி மேரி அன்டோனியெட்டுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம் ?