பாராளும் பரம்பரைக்கு
ஒருத்தனாக பொறந்த மகன்
ராசாத்தி ராசன் மகன்
மகராசன் கொள்ளுப்பேரன்
கன்னத்துல காத்து பட்டா
கல்லு போல கன்னிப் போகும்
மேலுலத் தான் வெயிலு பட்டா
தோலெல்லாம் வெடிச்சு போகும்
தங்க தட்டில் ரொட்டி தின்னு
நோட்டுல தான் கை தொடச்சி
பூ பாதம் நோகுமின்னு
கைமேல நடந்த தொர
அரண்மனை சொகத்த விட்டு
தெருவோட திரிஞ்சதென்ன
ஆளு சேன அம்பாரி
அத்துபுட்டு போனதென்ன
உம்முன்னா ஓடி வர
நூறு பேரு இருக்கையில
வெறும் பய வீட்டிலெல்லாம்
சேவகம் தான் செஞ்சதென்ன
வகைக்கு ஒண்ணா தான்
சோறு பொங்கி கெடக்கையிலே
பட்டி தொட்டி பல திரிஞ்சி
பழைய கஞ்சி குடிச்சதென்ன
குடிசைக்கு தான் போனதென்ன
கடகண்ணி கண்டதென்ன
கண்ட பய தோள்மேல
கைபோட்டு நின்னதென்ன
ஆளில்லா சீமையில
அரசாள வந்த மகன்
மன்னரின்னு பட்டம் கட்டி
ஆள வந்த சீமதொர
செவத்த தோலு கருகருக்க
சேரிக்குள்ள போனதென்ன
சீமசென்ட் வாசன போய்
வியர்வ கண்ட கோலமென்ன
எடுபட்ட பயல்வளுக்கு
பெருமையெல்லாம் தெரியலையே
வீடு தேடி வந்து நின்ன
மவராசன் மனம் வெளங்கலியே
ஆகாச வெமானமெல்லாம்
வரிச கட்டி காத்திருக்க
அழுக்கான ரயில் ஏறி
போனபோதும் புரியலையே
கூட்டமா வந்து நின்னு
கூடித்தானே பாத்தாங்க
போட்டோவுல நெருக்கமாதான்
பல்லிளிச்சி நின்னாங்க
வீட்டுக்குள்ள வந்தப்ப
கூழூத்த மறுக்கலையே
கயத்து கட்டில் இழுத்துபோட்டு
வீசி விட சொனங்கலையே
வீடு வரை வந்தவுக
வீதிவரை வாரலியே
வீதியில நின்னவுக
பூத்து போயி சேரலையே
போயி சேந்த பயலெல்லாம்
மாத்தி போட்ட சோகமென்ன
கஞ்சி ஊட்டி விட்டுபுட்டு
கைகழுவி போனதென்ன
என்ன செஞ்சு என்ன செய்ய
எங்க போயி சொல்லி அழ
முச்சந்தியில் நிக்க வச்சு
மூக்கறுத்தா ,எத சிந்த
சொல்லி சொல்லி மாளலியே
மனசு சொம எறங்கலியே
மவராசன் அழகு மொகம்
காண மனம் பொறுக்கலியே
சொரிஞ்சிவிட்ட முதுகெல்லாம்
செரங்காத்தான் அப்பிடனும்
கஞ்சி போட்ட கைமொத்தம்
வெளங்காம போயிரனும்
வோட்டு போட்ட பெரியவுக
வேக்காட்டில் வெந்திடனும்
மாத்தி போட்ட மைனரெல்லாம்
மக்கித் தான் போயிரனும்
அரும தொர மானமிப்ப
கடசரக்கு ஆனதென்ன
கண்ட பய பல்லுபட்டு
பெரும கெட்டு போனதென்ன
அழுதழுது ஓஞ்சாலும்
போக வேற வழியுமில்ல
அஞ்சு வருசம் ஆகும் முன்னே
அங்க ஆள சாரமில்ல
ஆத்தாளும் அக்காளும்
அருமையான மச்சினரும்
கண்ணுபட்டு வந்த கொற
காணாம போனதுன்னு
மன்னருன்னு மகுடம் கட்டி
அரசாள பாத்திருங்க
சிங்-காசனம் ஏத்திருங்க ....
5 comments:
கலக்கிட்டீங்க..வாவ் மிகவும் அருமையாக இருந்தது இந்த பதிவு. இரண்டு முன்று தடவைகளுக்கு மேல் மீண்டும் மீண்டும் படித்து ரசித்தேன்
என்றும்அன்புடன்
உங்கள் சகோதரன்
மதுரைத்தமிழன்
கவிதைக் களமும் கையாண்ட விதமும் அருமாய்.
ரொம்ப ரொம்ப நன்றி தோழர் மதுரைத்தமிழன் அவர்களே
மிக்க நன்றி விச்சு
தங்கள் பதிவை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன். நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்கள். நன்றி.
http://blogintamil.blogspot.com.au/2012/03/blog-post_16.html
Post a Comment