இன்றிரவில்
என் வாசல் வந்து நின்றது மழை
யாசிப்பதாய் பாவித்து ....
காணாதது போல் நான் இருக்க
படிதாண்டி மெல்ல
கூடம் தொட்டு
என் வழியெங்கும்
முத்துக்கள்
கொட்டி
செல்லமாய்
சாளரம் வழியே
என் கன்னம் வருடி
ஏதோவென்று
நான் இருக்க
பொய்க் கோபத்தில்
படபடவென்று
மொட்டை மாடி ஏறி
என் துணிகள் நனைத்து
துணி எடுக்க
தவிப்புடன் நான் ஓட
என் கரம் பற்றி
ஹோவென சிரிக்கும் மழை ......
22 comments:
அருமையான கவிதை சகோ!
நன்றி நண்பரே
எளிய வரிகள். நளினமான நடை. மழையை ஒரு பாத்திரம் போல சித்தரித்திருக்கும் கற்பனை மிக அழகு.
வாழ்த்துக்கள்...
மழை ஒரு தோழி போலவும் காதல் போலவும் பலவாறாய் உள்ளம் தீண்டுகிறது ..நன்றி வருணன்
கற்பனைப் புரவிகள் துள்ளியோடும் மன வெளியில் மழை தோழியாகவும் ஆகின்றாளோ! வாழ்த்துக்கள். தொடர்ந்து படையுங்கள். நானும் கவிதைகள் கிறுக்குவதுண்டு...
மன வெளியில் எல்லாம் சாத்தியமே ..உங்கள் அழகான வாழ்த்துக்கு நன்றி
மழையெனப் பொழிந்துள்ள ’மழை’க்கவிதை அழகு ;)
பாராட்டுக்கள். vgk
உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி VGK
என்னால் பதிவர் திருவிழாவிற்கு வர முடிய வில்லை என்ற வருத்தம் தான். உங்கள் அனைவரையும் நேரலையில் கண்டது மகிழ்ச்சி, உங்கள் புகைப்படம் கண்டேன், வாழ்த்துக்கள் தோழா, என் தளத்திற்கும் கொஞ்சம் வாங்களேன்
நான் பதிவுலகிற்கு ஒன்ற மாத குழந்தை.
நன்றி
என்னால் பதிவர் திருவிழாவிற்கு வர முடிய வில்லை என்ற வருத்தம் தான். உங்கள் அனைவரையும் நேரலையில் கண்டது மகிழ்ச்சி, உங்கள் புகைப்படம் கண்டேன், வாழ்த்துக்கள் தோழா, என் தளத்திற்கும் கொஞ்சம் வாங்களேன்
நான் பதிவுலகிற்கு ஒன்ற மாத குழந்தை.
நன்றி
சகோ ,என்னாலும் பதிவர் திருவிழாவிற்கு செல்ல இயலவில்லை.உங்கள் வலைதளத்திற்கு அவசியம் வருகிறேன்
சின்ன ஒரு வார்த்தையில் என்ன ஒரு அழகான பாராட்டு ..நன்றி சீனி
மிகவும் அருமை...
தொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி…
மிக்க நன்றி உங்கள் தொடர் ஆதரவிற்கு தனபாலன்
மழையில் நனைந்தது போன்றதொரு உணர்வை தந்த நல்ல கவிதை..
மிக்க நன்றி ராபர்ட்
அடடா.... லேட்டா வந்துட்டேனே... எத்தனை முறை வந்தாலும் மழை அழகு! சலிப்பதேயில்லை. உங்களின் கவிதைகளும் அதுபோலத்தான். ரசனை கூடிக்கொண்டே தான் வருகிறது. செல்லமாய் சாளரம் வழியே கன்னம் வருடி.... சான்ஸே இல்ல... சூப்பர்ங்க பூங்குழலி.
மழை கவிதை படிக்க நீங்க இன்னமும் வரவில்லையே என்று யோசித்துக் கொண்டிருந்தேன் ...மிக்க நன்றி கணேஷ்
வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துகள்..
http://blogintamil.blogspot.in/2014/09/blog-post_12.html?
தகவலுக்கு மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி
//படிதாண்டி மெல்ல
கூடம் தொட்டு//
கூடத்தின் பின் தானே படிக்கு வந்து இருக்கவேண்டும்... ஒருவேளை இது "தென் கிழக்கு பருவ மழையோ"? ரசித்து படித்தேன், வாழ்த்துக்கள்.
நன்றி விசு
Post a Comment