Friday 10 May 2013

மக்களாட்சி

 

 
மக்களாட்சி வராது
இன்றோ
இவ்வருடத்திலோ
இல்லை என்றுமே
பயத்தினாலும் சமரசத்தினாலும்

எனக்கும் அத்தனை உரிமையும்  உண்டு
அடுத்தவன் போலவே ....
நிற்க 
என் இரண்டு பாதம் ஊன்றி 
நிலத்தை உரிமை கொள்ளவும்

அத்தனை அயர்வாய் இருக்கிறது
மக்கள் சொல்ல கேட்கையில்
நடக்கும் படி நடக்கட்டும் என்று
இறந்தபின் என்  சுதந்திரம்
எனக்கு தேவையில்லை
நாளைய ரொட்டியில்
நான் வாழ முடியாது

சுதந்திரம்
ஒரு வலிய விதை
ஒரு அதீத தேவையில்
விதைக்கப்படுவது

இங்கே வாழ்கிறேன் ,நானும்
எனக்கு சுதந்திரம் வேண்டும்
உன்னை போலவே ....

 
 

Democracy

Democracy will not come
Today, this year
Nor ever
Through compromise and fear.

I have as much right
As the other fellow has
To stand
On my two feet
And own the land.

I tire so of hearing people say,
Let things take their course.
Tomorrow is another day.
I do not need my freedom when I'm dead.
I cannot live on tomorrow's bread.

Freedom
Is a strong seed
Planted
In a great need.

I live here, too.
I want freedom
Just as you.



13 comments:

Yaathoramani.blogspot.com said...

அருமையான கவிதை
அழகான மொழிபெயர்ப்பு
பகிர்வுக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்

திண்டுக்கல் தனபாலன் said...

வரிகள் அருமை... மொழிபெயர்ப்பிற்கு நன்றி... வாழ்த்துக்கள்...

பூங்குழலி said...

உங்கள் வாழ்த்திற்கும் தொடர் ஆதரவிற்கும் நன்றி தனபாலன் மற்றும் ரமணி அவர்களே

கீதமஞ்சரி said...

சுதந்திரக் காற்றை சுவாசிக்க விரும்புபவனின் எண்ணங்களை மிக அழகாய் வெளிப்படுத்தும் கவிதை. நேர்த்தியானத் தமிழாக்கத்துக்குப் பாராட்டுகள் பூங்குழலி.

பூங்குழலி said...

Langston Hughes பல கவிதைகளில் அடிமைத்தளையின் வேதனை தெரியும் .உங்கள் அழகான கருத்துக்கு நன்றி மஞ்சரி

maniajith007 said...

அக்கா உதவுங்கள் எனக்கு வேற்று மொழி கவிதைகளை மொழி பெயர்க்க ஆசை ஆனால் போதுமான ஆங்கில அறிவு இல்லை இந்த கவிதையை பாருங்கள் நான் சரியாக மொழி பெயர்த்துல்லேனா மேலும் என் கவிதைகளை உங்கள் பார்வைக்கு நேரடியாக அனுப்புவது எப்படி
http://maniajith.blogspot.in/2013/05/blog-post_23.html

maniajith007 said...

அக்கா எப்படி செய்யலாம் என சொல்லுங்கள் அக்கா தயவு செய்து

www.eraaedwin.com said...

அருமை பூங்குழலி.
“ நாளைய ரொட்டியில் எவனாலும் வாழ இயலாதுதானே.இனி தொடர்ந்து பார்ப்பேன்

பூங்குழலி said...

மிக்க நன்றி எட்வின் .தொடர்ந்து வாருங்கள் .என் படைப்புகள் உங்கள் தொடர் வருகைக்குரியாதாக தொடர்ந்து இருக்கட்டும்

பூங்குழலி said...

மணி ,மின்னஞ்சல் அனுப்புங்களேன்

திண்டுக்கல் தனபாலன் said...

வணக்கம்

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/05/blog-post_29.html) சென்று பார்க்கவும்... நன்றி...

பூங்குழலி said...

செய்திக்கு மிக்க நன்றி தனபாலன் .அறிமுகம் செய்த அன்பிற்கினிய கவிநயாவிற்கு நன்றி

Seeni said...

aamaam