Wednesday, 10 July 2013

மழை





ஏதுமில்லா
ஒற்றை இரவில்
விழித்தே கிடந்தேன் நான்
கண்மூட மறுத்து
சோம்பலில் சுகித்திருந்தேன்
வேடிக்கை பார்த்திருந்தது
வெறுமை


கருத்திருந்தது வானம்
கண்சிமிட்டி  காணாமல் போயின
நட்சத்திரங்கள்
என் தலை வருடிக்  கடந்தது
நிலா
என் கன்னம் கிள்ளிப் போனது
காற்று


இன்னமும்  விழித்திருந்தேன்
பிடிவாதமாய்
கண்டிப்பதாய் வந்து போனதொரு
மின்னல்
பெருமூச்செறிந்து அகன்றது
காற்று


கனவுகள் அமர்ந்து
இமை அயர்ந்த நொடியில்
ஜன்னல் ஓரமாய் எட்டி
விளையாட்டாய் நீர் தெளித்து
உறக்கம் கலைத்து
இரவெல்லாம் என்னுடன் கதைத்திருந்தது
மழை



 


13 comments:

Nat Sriram said...

குட் :)

Seeni said...

arumai!

MANO நாஞ்சில் மனோ said...

உறக்கம் கலைத்து
இரவெல்லாம் என்னுடன் கதைத்திருந்தது
மழை //

மிகவும் ரசித்தேன் ரசித்தேன்...!

சாய்ரோஸ் said...

மழையைப்பற்றி நிறைய கவிதைகள் படித்திருக்கிறேன்... அதில் சிறந்த படைப்புகளின் வரிசையில் நிச்சயம் இதுவும் ஒன்று என்பதில் மாற்றமில்லை... இரவின் தனிமை மௌனத்தில் ரசித்த மழையை இதைவிட அழகாய் எழுத்தில் வடித்திட முடியாது என்பது நிதர்சனம்...
நல்ல கவிதை...வாழ்த்துக்கள்..

கவியாழி said...

அருமை..அருமை...வாழ்த்துக்கள்

பூங்குழலி said...

நன்றி சீனி

பூங்குழலி said...

நன்றி நன்றி மனோ

பூங்குழலி said...

நன்றி கவியாழி

பூங்குழலி said...

உங்கள் அழகிய வர்ணனைக்கும் பாராட்டுக்கும் நன்றி சாய்ரோஸ்

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை...

உங்களின் தளம் அறிமுகம் : http://jeevanathigal.blogspot.com/2013/07/blog-post_14.html

வாழ்த்துக்கள்... நன்றி...

பூங்குழலி said...

என் நெஞ்சார்ந்த நன்றிகள் தனபாலன் -உங்களின் இந்த அன்பிற்கு .

எம்.ரிஷான் ஷெரீப் said...

அருமையான கவிதை சகோதரி !

பூங்குழலி said...

மிக்க நன்றி ரிஷான்