Monday, 12 August 2013

சாளரத்தில்




எவர்க்கும் எட்டாத
ஒற்றை சாளரத்தில்
நின்றிருக்கிறேன்
கண்  எட்டும் தொலைவெங்கும்
வடிந்து கிடக்கிறது
நான் கடந்த பாதை


இடியாப்ப சிக்கல்களாய்
பிணைந்து பிரிந்து
ஒற்றை நூலாய்
அயர்ந்து மெலிந்து
எட்டியிருக்கிறது
சாளரம் வரையும்


பாதை முழுமையும்
வெம்பிக் கிடக்கின்றன
வலிய  கொய்தவையாய் 
என் விழிகளும்
காற்றில் மூச்சுரைத்து
கரைந்து கிடக்கின்றன
அவ்விழிகளுள் வசித்த கனவுகளும்

சாளரம் ஏகி  
அவை மட்டுமே
ஆதரவாய்
என் கூந்தல் வருடி போகும்
அவ்வேளை
மென்வருடலாய்
என் கைகள் அணைந்து போகும்
காலம் சுமந்து வந்த
என் கவிதையொன்றும் .....





 




















9 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...
This comment has been removed by the author.
வை.கோபாலகிருஷ்ணன் said...

சோக கீதமாயினும் சொல்லிய விதம் அருமை. பாராட்டுக்கள்.

-தோழன் மபா, தமிழன் வீதி said...

கவிதை செய்பவளு(னு)க்கு
கவிதையே துணை!

கவிதை அருமை!.
வாழ்த்துகள்!

(ரொம்ப நாளாச்சி பார்த்து?)

தனிமரம் said...

கவிதை அருமை!.
வாழ்த்துகள்!

சாய்ரோஸ் said...

எவர்க்கும் எட்டாத
ஒற்றை சாளரத்தில்
நின்றிருக்கிறேன்
கண் எட்டும் தொலைவெங்கும்
வடிந்து கிடக்கிறது
நான் கடந்த பாதை...

ஆரம்பமே மிக அருமை... கடந்து வந்த வாழ்க்கை பாதையில் ஒவ்வொருவருக்கும் விதவிதமான வலிகளும், வேதனைகளும் நிச்சயம் இருக்கும். எல்லோருமே வெறுமனே மகிழ்ச்சியை மட்டுமே கடந்து வந்திருக்கமுடியாது...

ஆனால் அதைக்கவிதை நடையில் இவ்வளவு அழகாய் சொல்லியிருப்பது மிக மிக அருமை... அதே போல பெரும்பாலும் கவிதை எழுதுபவர்களுக்கு தங்களது ஆழ்மன இனம் புரியா உணர்ச்சிகளுக்கு கவிதைகள் மட்டும்தான் வடிகால்...

உங்கள் கவிதை வெறுமனே வார்த்தைகளில் பேசாமல், படிப்பவர்களின் மனதோடு பேசுகிறது...

நல்ல படைப்பு... தொடர்ந்து இதே போன்று பல அற்புத படைப்புகளை அரங்கேற்றம் செய்ய மனமார்ந்த வாழ்த்துக்கள்...

பூங்குழலி said...

மிக்க நன்றி வைகோ ..ஆசிர்வதிக்கப்பட்டதாய் உணர்கிறேன்

பூங்குழலி said...

உண்மைதான் தோழரே ..நன்றி ....இனி தொடர்ந்து வருவதாய் இருக்கிறேன்

பூங்குழலி said...

நன்றி தனிமரம்

பூங்குழலி said...

கைதட்டி செல்லும் உங்களின் வாழ்த்துக்கு நன்றி சாய்ரோஸ்.என் கவிதை உங்கள் மனதோடு பேசியதென்ற உங்கள் சொற்கள் மனம் குளிர்விக்கின்றன