Saturday 12 October 2013

இன்று




இன்று போலவே இருந்தது நேற்றும்
இன்றும் மாறாது , நாளையும் கூட


நேற்றில் இன்று
தான் புதிதென பாவித்து
ஜோடனை செய்தபடி இருந்தது

இன்றாகி
ஜோடனைகள் கலைத்த போது
நேற்றாகி இருந்தது இன்றும்
நேற்றைய நாளையும் 


இன்றும்
நாளை வேறென 
கட்டியம்  சொல்லியபடி இருக்கிறது
நாளை  விளங்கித்தான்   போகும்
இது வெறும் நேற்றென


நேற்றும் இன்றும் நாளையும்
இன்றே என்றது இன்று


இன்றே என்றும் என்றால்
தினம் வேறொன்றாக
ஒப்பனைகள் எதற்கென 

ஒப்பனைகள் எனக்கில்லை என
என் ஒப்பனைகள்
கலைத்தபடி கடந்து போனது
நாளையாக





10 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ரசித்தேன்... வாழ்த்துக்கள்...

Anonymous said...

வணக்கம்
இன்று போலவே இருந்தது நேற்றும்
இன்றும் மாறாது , நாளையும் கூட

கவிதையின் வரிகள் அருமை வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

பூங்குழலி said...

வழமை போலவே முதன்மை வாழ்த்துகளுக்கு நன்றி தனபாலன்

பூங்குழலி said...

அன்புடன் வந்து ரசித்து வாழ்த்தியதற்கு நன்றி ரூபன்

Yaathoramani.blogspot.com said...

காலத்தின் மாய விளையாட்டைச்
சொல்லிப்போகும் அற்புதமான கவிதை
பகிர்வுக்கும் தொடரவும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

பூங்குழலி said...

மிக்க நன்றி ரமணி அவர்களே

மகேந்திரன் said...

நேற்றும் நாளையும்
இன்றாகி நிற்கிறது
ஒப்பனைகளின் நிதர்சனத்துடன்...
அழகுக் கவிதை...

பூங்குழலி said...

மிக்க நன்றி மகேந்திரன்

Sakthivel said...

நல்லா குழம்பி இருக்கிறேன். எப்படி தான் எழுதுனீங்களோ??!!!!! :-)) இதைப் படித்துபோது இப்படி தோன்றியது...

நேற்றும் இன்றும் நாளையும்
என்றும் நேற்று ஆவதே விதி என்றது நேற்று... :-)

பூங்குழலி said...

இன்றே உண்மையானது .நாள் என்றும் இன்றாகவே இருக்கிறது .நாமே மாறிக்கொண்டிருக்கிறோம் .அதை நேற்றாகவும் நாளையாகவும் பிரிப்பதும் நாமே தானே .நன்றி சக்திவேல்