Wednesday 12 February 2014

விடுதலை

எந்த ஒரு நீண்ட கால   நோயாளிக்கும் தன் நோயிலிருந்து விடுதலை கிடைத்து விட வேண்டும் என்பது ஒரு கனவாகவே இருக்கும் .என்றேனும்  அது பலிக்கும் என்ற நம்பிக்கையை சார்ந்தே பலர் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

நான் பணிபுரிவது எச் ஐ வி நோயாளிகளுக்கான ஒரு  சிறப்பு மருத்துவமனையில் .சிகிச்சைக்கு தொடர்ந்து வந்தாலும் இது குறித்த கனவுகளும் நம்பிக்கையும் கண்டிப்பாக எல்லாருக்கும் உண்டு .சிலர் சளைக்காமல் ஒவ்வொரு முறையும் வரும் போது விசாரித்து போவார்கள் .சிலர் மருந்து வருமா ?என்பதோடு நிறுத்தி கொள்வார்கள் .சிலர் ஊடகங்களில் இது குறித்து வரும் செய்திகளை கொண்டு வந்து விளக்கம் கேட்பார்கள் .அனேகமாக என்னுடைய பதில் கண்டிப்பாக சில வருடங்களுக்குள் வரும் என்பதாகவே இருக்கும் .

வழக்கம் போல் சிகிச்சைக்கு வந்தார் ஒரு பெண் .

பெண் -"நோயே  இல்லாம பண்ண  மருந்து வருமா ?"
நான் -    "கண்டிப்பா வரும் "
பெண்  -"எப்ப வரும் ?"
நான் -  "எப்ப வேணும்ன்னா வரலாம் ...ரெண்டு மூணு வருஷத்துக்குள்ள .."
பெண் -"இந்த ஆஸ்பத்திரி எச் ஐ வி இருக்கறவங்களுக்கு மட்டும் வைத்தியம்    பாக்குறது தான?"
நான் - "ஆமா "
பெண் -"அந்த மருந்து வந்தா இங்க தருவீங்களா ?"
நான் -"கண்டிப்பா தருவோம் ..."
பெண் -எங்களுக்கெல்லாம் மருந்து கொடுத்து நாங்க நல்லாயிட்டா ,நீங்க என்ன செய்வீங்க ?"
நான் -"தொழில் கெட்டு போயிரும்ன்னு மருந்து வந்தா கொடுக்காம
வச்சிக்குவோம்ன்னு நெனச்சீங்களா ?நோயா இல்ல ..ஒங்களுக்கெல்லாம் மருந்து கொடுத்திட்டு நாங்க வேற நோய்க்கு வைத்தியம் பாக்க போயிருவோம் ."



8 comments:

Seeni said...

வேதனக்குள் ஒரு நகைச்சுவை

Yaathoramani.blogspot.com said...

நமபிக்கையூட்டும்
அருமையான பதில்
பகிர்வுக்கு நல்வாழ்த்துக்கள்

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்

ஒவ்வொரு வர்த்தைகளும் ஆறுதல் சொல்லும் வகையில் உள்ளது

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல பதில்...

கோமதி அரசு said...

உங்கள் பதில் போல் நல்ல காலம் வரட்டும்.
வாழ்த்துக்கள்.

பால கணேஷ் said...

அதுதானே... மனித இனத்திற்கு வியாதிகளா இல்லாமல் போயவிடப் போகிறது...? சிரிக்கச் சிரிக்கச் சொன்னாலும் சற்றே வேதனையும் ஊடுருவுகிறது. அப்படியாகிலும் அந்தக் கொடிய வியாதி இல்லாமல் ஆனால் மகிழ்ச்சி என்ற நினைவும் கூடவே.

பூங்குழலி said...

உண்மைதான் .நகைச்சுவையாக தெரிந்தாலும் ஒரு நோய் சுமந்து வாழ வேண்டியிருப்பது ஒரு வேதனையான விஷயம் தான் .ஆனாலும் பிழைப்பிற்காக நாங்கள் கொடுக்காமல் விட்டுவிடுவோம் என்ற அந்த பெண்ணின் பயம் அதிர்ச்சியூட்டுவதாக இருந்தது

MANO நாஞ்சில் மனோ said...

நீங்கள் அவர்களுக்கு சொல்லும் ஆறுதலே உங்களுக்கு கோடி புண்ணியம் கிடைக்கும் !