Thursday 29 May 2014

களவு போன கதாநாயகர்

எம்ஜிஆர் -மக்கள் மனங்களை தன் தனி வசீகரத்தாலும் ஆளுமையாலும் கொள்ளை கொண்ட ஒரு மாமனிதர் . தன் படங்களிலும் பாடல்களிலும் நல்ல கருத்துகளை விதைத்து அவை இன்றளவும் எடுத்தாளப்படும் அளவிற்கு அவற்றை நிலை பெற செய்தவர் .

எதற்கு இந்த முன்னோட்டம் என்று குழம்புவர்களுக்கு ,என் http://mgrsongs.blogspot.in/இன் ஆரம்ப புள்ளி இதுதான் .எம்ஜிஆர் பாடல்களின் ரசிகை நான் .பாடல் வரிகளை ஒரே தளத்தில்  தேடிய போது அவ்வாறாக அவை கிடைக்கவில்லை என்பது தெரிந்தது .அதனாலேயே இந்த பிளாக்கை ஆரம்பிக்கும் எண்ணம் வந்தது .

ஆரம்பித்த போது எம்ஜிஆரை பற்றி ஒரு கவிதை எழுதினால் என்ன என்று எழுதிய கவிதை தான் பிளாக்கில் காணும்

"கண்டவரைக் கட்டிபோடும் வசீகரத்திற்கு சொந்தக்காரர்

பூக்களை ஏந்திப் போகும் புன்னகைக்கு சொந்தக்காரர்

கேளாமல் அள்ளித்தரும் பொற்கரங்களுக்கு சொந்தக்காரர்

மக்கள் மனங்களை கட்டி ஆளும் மகுடத்திற்கு சொந்தக்காரர்

என்றும் மாறாதிருக்கும் மங்காப் புகழுக்கு சொந்தக்காரர்

அன்றும் இன்றும் என்றுமே மக்கள் திலகம்"


சில நாட்களுக்கு முன்னால்  ஏதோ தேடலின் போது மைய்யம் வலைத்தளத்திற்கு செல்ல நேர்ந்தது .இதில்  ஒரு நண்பர்  என்னுடைய இந்த  கவிதையை  தன்னுடைய  கவிதையாக என் அனுமதியின்றி பதிவு  செய்திருந்தார் .

Makkal thilagam mgr part 7 - Page 340 - The Forum Hub

வலைத்தளத்தின்   நிர்வாகத்திற்கு மின்னஞ்சல் அனுப்பி ஆனது ஏதுமில்லை .
இன்று ஏதேச்சையாக இந்த கவிதை வரிகளை இட்டு கூகுளில் தேடிய போது இது  இன்னமும் சில இடங்களில்  பதிவு செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது .

 












இதில் ஒரு தளத்தில் மட்டுமே என்னுடையதாக இந்த கவிதை பதிவு
செய்யப்பட்டிருக்கிறது .இதை தொடர்ந்து செய்வதற்கு  பெரிதாக ஏதும் இல்லை என்றாலும் இது குறித்த வேண்டுகோள் ஒன்றை என் பிளாக்கில் இன்றிலிருந்து இணைத்திருக்கிறேன் .





3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

திருடனாய்ப் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது...

பால கணேஷ் said...

ஐயோ பாவம்... இல்லாதவர்கள் திருடிக் கொள்கிறார்கள். வாத்யாரின் பெருமை சொல்லும் பாடல் பரவுவதில் மகிழ்வும், இவர்களை நினைத்து பரிதாபமும் ஒருங்கே ஏற்படுகிறது.

பூங்குழலி said...

ஆமாம் தனபாலன் /கணேஷ் .நான் மிகவும் ரசித்து எழுதிய கவிதை