Wednesday, 7 January 2015

சும்மாச்சுக்கும் ...

ப்ளாக் பக்கம் வந்தே ரொம்ப நாளாச்சு .அப்புறம் எப்பவுமே ரொம்ப பீலிங்க்ஸ் மேட்டரே எழுதுற மாதிரி இருக்கேன்னு சும்மாச்சுக்கும் ஒரு  ஜாலி போஸ்ட் .

அம்மாவோட சொத்து குவிப்பு (சொத்து என்ன குப்பையா ,நம்ம மாநகராட்சி மாதிரி குவிக்க ?) வழக்கு மாரத்தான் மாதிரி நடந்து நடந்து ,அப்புறம் என்னவோ ஏதோ  திடுக்குன்னு வக்கீல் ,ஜட்ஜ்  எல்லாரும் கண்முழிச்சு சூடா  டீ  குடிச்சு   ,சுறுசுறுப்பாகி ஒரு வழியா தீர்ப்பு வந்தாச்சு .அம்மா குற்றவாளின்னு சொல்லி (ஒரு ரூவால  சொத்து  குவிக்க... விடுங்க  சேக்கனும்ன்னு நினைக்க கூட முடியாதுன்னு  சின்ன குழந்தைக்கு கூட ..சரி போகுது  ) தண்டனையும் கிடைச்சாச்சு .


தீர்ப்பு வந்தவுடனே எல்லா பத்திரிக்கையும் டிவியும்   ஜெயலலிதாவின்  அரசியல் வாழ்வு முடிந்தது .கட்சியில ரெண்டாம் கட்ட ?ஏன் ? தலைவர்களே கிடையாது ,கட்சி என்னாகும்ன்னு எல்லாம் கவலைப்பட்டுக்கிட்டு  இருந்த போது அதிமுகவில ஒருத்தர் மூளையில பலமான LED   பல்பு எரிஞ்சு (மோடி சொல்லியிருக்காருப்பா )  அவர் சட்டுன்னு கண்டுபிடிச்சது தான் "மக்கள் முதல்வர் " ஐடியா !சமீப கால அரசியல் இப்படியொரு பளிச் சை சந்தித்ததில்லைங்கறதால அவருக்கு  நம்மோட மனப்பூர்வ ஆசிகள் .மாநிலங்கள் அவை  வாய்க்கவும் வாழ்த்துகள் .


அதிமுகவில கூட சொந்தமா யோசிக்கிறாங்கப்பான்னு   நாம ஜெர்க் ஆன கேப்புல  ,  அட பதவியில இல்லாமையே முதல்வராக இருக்கலாம்ங்கறது மத்த கட்சிக்காரங்களுக்கு  பொளேருன்னு உரைக்க நாலாபக்கமும்  முதல்வர் பட்டம்  தான் .


ஏகப்பட்ட சீட்டு குலுக்கி போட்டு,  பேர் எடுத்து, தொண்டர்களே இல்லாத காங்கிரஸ் கட்சிக்கு (அங்க எல்லாரும் தலைவர் தானாம் -அவங்கவங்க கோஷ்டிக்கு ) வேண்டா வெறுப்பா மாநில தலைவரான  ஈவிகேஎஸ் இளங்கோவன் - "தொண்டர்களின் முதல்வர்  ".


நடந்து நடந்து ஓடா  தேஞ்சு ,ஓட்டு விழாட்டியும் கோச்சுக்காம டீக்கா  டீ ஷர்ட் போட்டுக்கிட்டு மதுவிலக்கு மாரத்தான்  ஓடின வைகோ -"தமிழர்களின் முதல்வர் "


எப்ப வந்த கோபம்னு தெரியல, ஏன் வந்த கோபம்னும்  தெரியல  ,திடீருன்னு காங்கிரஸ் தமிழக மக்களை ஏமாத்திருச்சின்னு (சாமி கனவுல வந்து  சொல்லியிருக்கும் போல ) மந்திரி பதவி போனதும் கண்டுபிடிச்சி , தமாகா -வெர்ஷன் 2 ஆரம்பிக்கிற வேலையில இருந்த  ஜி.கே .வாசன் -போஸ்டர் பலவற்றில் எஜமானர்  போஸில் இருந்தாலும் -   "ஏழைகளின் முதல்வர் "


பலமுறை முதல்வரா இருந்திட்டாலும் அது போரடிக்காம ,ஸ்டாலினை ஏதோ ஒரு சாக்கு சொல்லி ஓரம் கட்டிவிட்டு  (அவருக்கு ஒரு வருங்கால முதல்வர் பட்டம் வேண்டாம் ,போஸ்டர் கூட இல்ல  )2016 ,2021 ஏன் 2026லிலும் அதன் பின்னரும் கூட  திமுகவின் முதல்வர்  வேட்பாளராக இருக்க போகும் டாக்டர் கலைஞர் - "தமிழின முதல்வர் "


பேரறிஞர் அண்ணா ,எல்லாரும் இந்நாட்டு மன்னர்ன்னு  எந்த நேரத்துல சொன்னாரோ தெரியல அப்படி இப்படி எல்லாரும் இந்நாட்டு முதல்வர் ஆயிட்டாங்க . பெரிய கட்சிக்காரங்க  முதல் வெறும் பேப்பர்  கட்சிக்காரங்க  வரைக்கும்  .


இப்படி  ஊரே  பதவி  ஆசையில இருக்கிறப்ப ,இரண்டாம் முறை வலிய முதல்வர் பதவி தேடி வந்தும் ,கண்ணீரும் கம்பலையுமா  அத ஏத்துக்கிட்டு, அத விட முக்கியமா முன்னாள் முதல்வர்ன்னு மட்டும் இல்ல ,இந்நாள் முதல்வர்ன்னு கூட சொல்லிக்காம ,அதிமுக பொருளாளர்ன்னு பல நாள் ஜெயா டிவி சொல்லியும் கோச்சுக்காம ,வரலாறு காணாத தன்னடக்கத்தோட இருக்காரு அய்யா ஓபிஎஸ்-அட , நம்ம நிஜ முதல்வர்  !