Monday, 27 April 2015

பவானிசிங்

 ஜெ., சொத்துக்குவிப்பு வழக்கில் அரசு தரப்பில் பவானிசிங் ஆஜராகலாமா என்பது குறித்து 3 பேர் கொண்ட உச்சநீதிமன்ற பெஞ்ச் இன்று தீர்ப்பளித்தது, பவானிசிங் நியமனம் செல்லாது என தீர்ப்பளித்துள்ளது. மேலும் மேல்முறையீட்டு வழக்கில் மறு விசாரணை கிடையாது என சுப்ரீம் கோர்ட் ஏற்கனவே அறிவித்துள்ள சூழ்நிலையில் நீதிபதி குமாரசாமி எந்த அடிப்படையில் தீர்ப்பு வழங்குவதென்று சுப்ரீம் கோர்ட் அறிவுரை வழங்கியது.
 -தினமலர்  (http://www.dinamalar.com/news_detail.asp?id=1240217 )

இன்று பவானிசிங் நியமனம்  செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது .ஆனாலும் மறுவிசாரணை தேவையில்லை என்றும் தீர்ப்பளித்துள்ளது .

1.நியமனமே தவறென்றால்  அவர் செய்த வாதங்கள் செல்லாது .அப்படி இருக்கும் பட்சத்தில் ,மறுவிசாரணை செய்வது தானே முறை ?

2.செல்லாத வாதங்கள் என்பதால் அன்பழகன் தரப்பு வாதங்களை கருத்தில் ஏற்பது என்ன நியாயம் ?அவர்கள்   எதிர்கட்சியினர் . மேலும் இந்த  வழக்கு வர காரணமானவர்கள் ?

3.இத்தனை காலம் தாமதமான பிறகு இன்னமும் ஓரிரு  மாதம் தாமதமானால் என்ன ?மறு விசாரணை நடத்துவது தானே சரியாக இருக்கும் ?

4.தாமதம் தாமதம் என்று சொல்பவர்கள் இத்தனை சட்ட ஓட்டைகளையும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எடுத்து சொன்ன சட்ட நிபுணர்களை  ஏன் குறை சொல்லவில்லை ?

5. பழைய வாதங்களின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்படுமாயின் மேல் முறையீட்டின் பலன் என்ன ?மேல் முறையீட்டின்அடிப்படையையே
இது கேள்வி குறியாக்குகிறது   ?