என் பிரிய பேஷன்ட் இவள் .ரோஜாப்பூ போல் இருப்பாள் .சின்ன பிள்ளை போல தத்தி தத்தி பேசுவாள் .தந்தை தாய் இல்லாமல் மாமாவால் வளர்க்கப்பட்டவள் .எப்போதும் ஒரு வித மனக்குழப்பத்திலேயே இருப்பாள் . எதற்கும் என்னிடம் தொலை பேசுவாள் .வாரத்தில் இருமுறையேனும் .
குழந்தை இல்லாமல் இருக்கவே அது குறித்து மிக வருத்தத்தில் இருந்தாள் .சுற்றாரின் இது குறித்த நச்சரிப்பு வேறு .இதெல்லாம் சேர்ந்து டிப்பிரெஷனாக (depression ) மாற மனநல மருத்துவரிடம் அனுப்பி அதற்கான சிகிச்சையும் மேற்கொண்டோம் .
இதனூடே இவள் கணவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டி வந்தது .அதே நேரத்தில் இவள் கருத்தரித்திருந்தாள் .கணவரின் உடல்நலம் குறித்து கவலையாய் இருந்தாலும் ரொம்ப சந்தோஷமாக இருந்தாள் .கணவரும் நன்றாக தேறினார் .2014 ,டிசம்பரில் அழகான பெண் குழந்தை பிறந்தது .குழந்தைக்கு எச்.ஐ.வி இருக்காதே என்று கேட்டுக்கொண்டே இருந்தாள் .குழந்தைக்கும் பரிசோதனை செய்யப்பட்டு நோய் இல்லையென உறுதி செய்யப்பட்டது .
பிரசவத்திற்கு பின்னர் கட்டிலிருந்த டிப்பிரெஷன் மீண்டும் தலை துவக்க ஆரம்பித்தது .மருந்துகள் சாப்பிட்டபடியே இருந்தாள் .திடீரென போன் செய்வாள் .ஏதேனும் கேட்பாள் .பதில் கேட்டுக்கொண்டு அதன்படி செய்வாள் .
போனவாரம் சொந்த பணி காரணமாக லீவில் இருந்தேன் .
இன்று காலை இவள் கணவர் தொலை பேசியில் .குழந்தையை அடுத்தபடி பரிசோதனைக்கு எப்போது அழைத்து வரவேண்டும் என கேட்டார் ."அவள் என்ன செய்கிறாள் ?அவளையும் சேர்த்தே அடுத்த வாரம் கூட்டி வாருங்கள் "என சொல்லவும் ,"அவள் போன வாரம் இறந்து போய்விட்டாள் "என்றார் கதறியபடி .ஐயோ என்று அலறியே விட்டேன் .
"நன்றாக தான் இருந்தாள் .என் அம்மா அக்காவிடம் சாதரணமாக பேசிக்கொண்டிருந்திருக்கிறாள் .திடீரென ரூமுக்குள் சென்று தூக்கு மாட்டிக்கொண்டாள் .எதற்கென்றே தெரியவில்லை என்றார் அழுதபடியே .சின்ன குழந்தையை விட்டுவிட்டு போய்விட்டாள் .குழந்தை வேண்டும் வேண்டும் என கேட்டுவிட்டு இப்படி செய்துவிட்டாள் .
போன வாரம் முழுவதும் உங்களுக்கு பேச முயற்சித்துக்கொண்டே இருந்தாள் ...."

7 comments:
அவர் ஏன் உங்களுக்கு தகவல் தெரிவிக்கவில்லை?
அவர்களிடம் இருப்பது என் தொலைபேசி எண் மட்டுமே .போன வாரம் நடந்து நான் இன்று தானே போனேன் .இயன்ற விரைவில் தகவல் தெரிவித்திருக்கிறார் என்றே நினைக்கிறேன்
சிறந்த பதிவு
சிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்
அந்த பெண் ஹெச் . ஐ. வி யால் பாதிக்கப்பட்டவரா?
நன்றி யாழ்பாவணன்
ஆமாம் நந்து
அன்புடையீர்! வணக்கம்!
அன்பின் அய்யா திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (01/07/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை அவரது வலைத் தளத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.
இணைப்பு: http://gopu1949.blogspot.in/
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
FRANCE
Post a Comment