Monday, 22 June 2015

இரவில்

நாம்  விலகியிருக்கிறோம்  ,
நம்மிடையே  நகரம் அமைதியாகிறது
அவள் தன்னை அமைதியாக்கிக் கொள்கிறாள்
நள்ளிரவு அவள் கண்களை பாரமாக்குவதால்
போக்குவரத்து  சிக்கல் தீர்ந்துவிட்டது 
காலியாக இருக்கின்றன கார்கள்  
ஐந்து தெருக்கள் நம்மை பிரிக்கின்றன
அவற்றின்  மேல் கிடக்கிறது நிலவொளி

ஓ !நீ உறங்குகிறாயா இல்லை கண்விழித்து கிடக்கிறாயா ,
என் காதலனே ?
உன் கனவுகளை என் காதலுக்கு திற
என் சொற்களுக்கு உன் இதயத்தை
என் எண்ணங்களை உனக்கு அனுப்புகிறேன்
நம்மிடையுள்ள காற்று  பொதிந்ததாக  இருக்கிறது
உன் ஜன்னலில் பறந்து மோதுகின்றன ,என் எண்ணங்கள்
ஒரு காட்டு பறவை கூட்டம்



At Night - Poem by Sara Teasdale


We are apart; the city grows quiet between us,
She hushes herself, for midnight makes heavy her eyes,
The tangle of traffic is ended, the cars are empty,
Five streets divide us, and on them the moonlight lies.

Oh are you asleep, or lying awake, my lover?
Open your dreams to my love and your heart to my words.
I send you my thoughts--the air between us is laden,
My thoughts fly in at your window, a flock of wild birds.

Friday, 5 June 2015

என் ஒற்றை வரி ..

என்றோ தவற  விட்டேன்
கவிதை வரி ஒன்றை
ஒற்றை வரி தொட்டு
வழிந்தோடிய  கவிதையையும்

ஏதோ ஒரு நாளில்
மின்னல் போல் தோன்றி
காணாமலும் போனது
மின்னல் போலவே

எங்கோ கிடக்கத்தான் செய்யும்
என அலட்சியம் செய்ததில்
எங்கில்லாமலும்  போனது
இல்லை எங்கோ போனது

கவிதைக்கென மன்றாடியதில்
அவ்வரி வேண்டுமென
அடம்பிடிக்கிறது
பேனா

எவ்வரியோ வேண்டாம் 
அவ்வரிக்கான கவிதை
பொதிந்திருக்கிறது
மையுள் என

வேறொருவர் கவிதையில்
சேர்ந்திருக்கும் என்கிறேன்
கவிதை இங்கிருக்க
அங்ஙனம் சேராதெனவும் 

காத்திருக்கிறோம்
நானும் என் பேனாவும்
எழுதி வைத்த கவிதையில்
அந்த ஒற்றை வரி பொருத்த