எங்கோ இருக்கத்தான் வேண்டும்
எனக்கான கவிதை ஒன்று
மான் எனவும்
மயில் எனவும்
குயில் எனவும்
பாவித்த சொற்கள் ஏந்தி
நிலா எனவும்
நதி எனவும்
ஜோடனைகள் பூசியதாய்
இருக்கத்தான் வேண்டும்
எனக்கான கவிதை
எங்கேனும்
என்றென்றும்
எப்பொழுதும்
தினம் தினம்
என காலங்கள் தொடுத்ததாய்
நிச்சயம் இருக்கும்
எனக்கான கவிதை
காத்திருக்கிறேன்
என்றேனும் ஒரு நாளில்
என்னிடம் வரும் என
அந்நாளில் எக்காளமாய்
சராசரிகள் நானல்ல என்றுவிட்டு
மீண்டும் காத்திருப்பேன்
என் கவிதைக்கென
5 comments:
காத்திருப்பேன்
என் கவிதைக்கென ...//
அழகு.
காத்திருப்பதற்கும் ஒரு பொருள் இருக்கவேண்டும் அல்லவா ?
சுப்பு தாத்தா.
www.vazhvuneri.blogspot.com
ஆமாம் தானே ..என்ன சுவை இருக்கும் எதிர்பார்க்க ஏதும் இல்லாவிடின்..நன்றி
அற்புதமான கவிதை
கவிதை வந்தபின் அதில்
இலயித்த விதமாய் முடித்திருக்கலோமோ
எனப் பட்டது
வாழ்த்துக்களுடன்..
அப்ப அது சராசரி தானே ..அதான் ...தொடரும் உங்கள் ஆதரவுக்கு நன்றி
வாவ்... வித்தியாசமான கோணம்... இப்படியொரு கோணத்திலான சிந்தனையை இதுவரை நான் எங்கும் படித்ததாய் நினைவிலில்லை. படிக்கும்போதே புதுமையாய் ரசிக்க வைத்தது...
எகத்தாளங்களுக்கு மத்தியில் வாழும் ஒரு மனது தனக்கான கவிதையும் நிச்சயம் எங்காவது இருக்கும் என்று நம்பிக்கை கொள்வது மிக யதார்த்தமான ஆனால் யாரும் யோசித்திராத வித்தியாசமான சிந்தனை...
செம...
Post a Comment