Wednesday, 13 July 2016

கவலையாக இருக்கிறது






எளிதானதாக எதுவுமே இல்லை
கவலைப்படுவதும்
அழுவதும் உட்பட
கவலைப்படுவதற்கென
சில மூலைகளும்
சில மனிதர்களும்
அவர்கள் சிலாகிக்கும்
காரணங்களும் தேவைப்படுகின்றன 

அழவோ
காரணங்கள் மட்டுமன்றி
சிறு கூட்டமேனும்  
அவசியமே...
இவை அற்ற
அழுகையும் கவலையும்
பிறந்து மடிகின்றன
சவலைப்பிள்ளைகளாக
சரி 
சிரித்து தொலையலாம் என்றால்
சிரிப்பதற்கு
இருக்கவே இருக்கின்றன
கால நேர நியமங்களும்
கட்டுப்பாடுகளும் கேள்விகளும்
எளிதில்லை  எதுவுமே
சிலநேர தனிமை பொழுதுகளில்  தவிர்த்து