
ஏதோ ஒரு நாளின் காதல்
சற்றே பூவின் வாசம்
எதற்கோ வந்த கோபம்
காரணமில்லா புன்னகை
தேநீர் குவளையின் சூடு
நனையும் மண்ணின் வாசம்
எல்லாம் தேடி வந்து
என் வாசலில் கொட்டித்தீர்த்தது
மழை
மழை போன பின்னும்
அவை வழிந்து கொண்டே இருக்கின்றன
ஜன்னல் கம்பிகளிலும்
தாழ்வாரத்திலும்
என் விரலிடுக்குகளிலும்
இன்னும் பிறவிலும்
4 comments:
அற்புதமான கவிதை
தேநீர் கோப்பையின் இளஞ்சூடு
இப்போது எங்களுக்குள்ளும்...
மனம் கவர்ந்த கவிதை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
மிக்க நன்றி ரமணி அவர்களே
அருமையான வரிகள்
தொடருங்கள்
உங்கள் தொடர் ஊக்கத்திற்கு நன்றி
Post a Comment