எப்பவுமே மருந்துகள் சரியா சாப்பிட மாட்டார் இவர் .போன மாசம் வந்து சில டெஸ்டுகள் செஞ்ச பின் ,ஒரு வாரம் கழிச்சு வர சொன்னா இன்னைக்கு தான் வந்தார் .வந்ததுமே கிளம்புற அவசரத்துல வேற இருந்தாப்பல .நா ,வேற சில வேலையில இருந்ததால பாக்க ஒரு ரெண்டு மணி நேரமாகிருச்சி .
"என்ன டாக்டர் இன்னைக்கு இவ்வளவு லேட் பண்ணிட்டீங்க ?இவ்வளவு நேரத்துல நா அப்பல்லோவுக்கே போய்ட்டு வந்துட்டேன் ."
இவர் அதிமுக .எப்பவுமே கட்சி கரை வேட்டியில தான் வருவாப்புல .
அப்பல்லோவுக்குனு சொன்னதுமே எதுக்குன்னு தெரிஞ்சு போச்சு .
எப்படி இருக்காங்க உங்கம்மா ?
"நீங்க தான் சொல்லணும் ."
எனக்கென்ன தெரியும்
"டாக்டர்ஸுக்கே தெரியலைன்னா எங்களுக்கு எப்படி தெரியும் ?"
நேத்தைக்கு ஓபிஎஸ்க்கு மாத்தி கொடுக்க சொல்லியிருக்காங்களே .அப்ப நல்லா தானே இருக்காங்க ?கலைஞர் கூட சி எம் கையெழுத்து போட்டிருக்காங்களான்னு கேட்டிருக்காரே ?
"கேட்கட்டும் மேடம் .அப்பத்தான் விஷயம் தெரியும் .ஆளாளுக்கு வராங்க போறாங்க, ஆனா யாருமே ஒண்ணுமே சொல்ல மாட்டேங்குறாங்களே ?போன வாரம் பூரா அப்பல்லோ வாசல்ல தான் இருந்தேன் .அப்புறம் இருந்து எதுவும் ஆகப் போறதில்லனு தெரிஞ்சதும் ஊருக்கு போய்ட்டேன் ."
என் கால பாருங்க ,காய்ச்சு போச்சி .30 கிலோமீட்டர் நடந்தேன் ,எங்கூர் பக்கத்துல ஒரு சாமிக்கு அம்மாவுக்காக வேண்டிகிட்டு .எல்லாரும் கிண்டல் பண்றாங்க.நா நடந்து என்ன ஆகப்போகுதுன்னு கேட்டுறாதீங்க .இத்தன பேரு செய்றதுல ஏதாவது ஒண்ணு சாமிக்கு போய் எட்டி அம்மா நல்லாகிற மாட்டாங்களான்னு தான் .இந்த வெள்ள வேட்டி சட்டை எங்கம்மா போட்ட பிச்சை .எங்கம்மா நல்லாயிருவாங்கன்னு சொல்லுங்க டாக்டர் ...."ஓவென அழ ஆரம்பித்தார் .....