வாழ்பவர் ,கடந்து போகும் பயணி
இறந்தவர் ,வீடு சேர்ந்தவர்
சொர்க்கம் பூமி இடையே ஒரு குறு பயணம்
அதன்பின்,
நாம் பத்தாயிரம் நூற்றாண்டுகளின் பழந்தூசு மட்டுமே
நிலாவில் முயல் மருந்துகளை வீணே இடிக்கிறது
ஃபூ -சங் ,இறவாவரத்தின் மரம்
எரியும் விறகுகளாக நொறுங்கி போனது
மனிதன் இறக்கிறான் ,
அவன் வெள்ளை எலும்புகள் வார்த்தையற்று ஊமைகளாகின்றன,
பச்சை பைன்கள் வசந்தத்தின் வருகை உணரும் போது .
திரும்பி பார்த்து பெருமூச்செறிகிறேன் ,
முன்னும் பார்த்தும் பெருமூச்செறிகிறேன்
மெச்ச என்ன இருக்கிறது
வாழ்க்கையின் கணநேர பெருமையில்...
The Old Dust - Poem by Li Po
The living is a passing traveler;
The dead, a man come home.
One brief journey betwixt heaven and earth,
Then, alas! we are the same old dust of ten thousand ages.
The rabbit in the moon pounds the medicine in vain;
Fu-sang, the tree of immortality, has crumbled to kindling wood.
Man dies, his white bones are dumb without a word
When the green pines feel the coming of the spring.
Looking back, I sigh; looking before, I sigh again.
What is there to prize in the life's vaporous glory?