Sunday, 10 December 2017

தேனீ எனக்கு பயப்படவில்லை

தேனீ எனக்கு  பயப்படவில்லை
வண்ணத்துப்பூச்சியை எனக்கு தெரியும்
காட்டின் அழகிகள் என்னை
ஆசையாய் வரவேற்கிறார்கள்

நான் வருகையில் 
இன்னமும் சத்தமாக  ஓடைகள் சிரிக்கும்
இன்னமும் பித்தாக காற்றுகள்  விளையாடும்
ஏன் ,என் கண்களே உன் வெள்ளிப் படலங்கள்
ஏன் ,ஓ கோடை காலமே ?



The Bee is not afraid of me.
By Emily Dickinson 

The Bee is not afraid of me.
I know the Butterfly.
The pretty people in the Woods
Receive me cordially—

The Brooks laugh louder when I come—
The Breezes madder play;
Wherefore mine eye thy silver mists,
Wherefore, Oh Summer's Day?

பொருளுடையாருக்கு

பல நாள் வராத பேஷண்ட் .சில வருடங்கள் இருக்கும் செக்கப்புக்கு வந்தே .இரன்டு வாரங்களுக்கு முன்னர் வந்தார் .ரொம்பவே மெலிந்திருந்தார் .
"வேலை சரியா இல்ல .ரொம்ப குடிக்கிறேன் .சிகரெட் வேற .பத்து மாசமா மாத்திரை வேற போடல .நீங்க கோபப்படுவீங்கன்னு வரல .இப்ப ரொம்ப முடியலனு வந்துட்டேன் ."டெஸ்டுகள் மருந்துகள் எல்லாம் முடிந்து இந்த வாரம் மீண்டும் வந்தார் .

இப்போது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் .
"எங்கம்மா கூட வருவேன்னு சொன்னாங்க .நா தான் எல்லாம் சரியா போயிட்டு இருக்கு . வேண்டாம்னு சொல்லிட்டேன் .இப்ப குடிக்கறதில்ல .என் கூட கம்பெனி கொடுத்திட்டு இன்னொருத்தர் குடிப்பாரு .அவரும் இப்ப பயந்து போய் நிப்பாட்டிட்டாரு ."ஒரு மாதம் கழித்து வர சொல்லி அனுப்பி வைத்தேன்

திடீரென நேற்று மதியம் இவர் அம்மா போன் பண்ணினார் ."அவனை பத்தி பேசணும் .என்ன கூட கூட்டிட்டு வர மாட்டேன்னுட்டான்."நான் போன்ல சொல்றேனே என்றவுடன் "இல்லை எனக்கு நேர்ல பேசணும்".நேற்று வந்தார் .டெஸ்டுகள் மாத்திரை மருந்துகள் பற்றி எல்லாம் கேட்டு தெரிந்து கொண்டார்

"இன்ஜினியராக்கும் இவன் .இப்படி தானா தன் லைப்பை கெடுத்துக்கிட்டான் .பொண்டாட்டி அழகா இருப்பா .இவனுக்கு எச்.ஐ.வினு தெரிஞ்சதும் விட்டுட்டு போய்ட்டா .அவள என்ன சொல்ல முடியும் .என்னோட எல்லா பிள்ளைகளும் வசதியா இருக்காங்க .எனக்கு 75 வயசாகுது .இவங்கப்பாவுக்கு 82 வயசாகுது .நமக்கு அப்புறம் இவன் என்ன பண்ணுவான்னு இப்பதான் ஒரு வீடு வாங்கி இவன் பேர்ல பேங்க்ல ஒரு அமவுண்ட் போட்டு வச்சிருக்கோம் .அதுவும் அவன் பேர்லேயும் என் பேர்லேயும் சேத்து போட்டிருக்கோம் .


 இவனுக்கொரு பொண்ணு இருக்கா .இப்பதான் காலேஜ் முடிச்சிட்டு எம்பிஏ சேர போறா .பொண்டாட்டி வந்து கூட பாக்கறதில்ல.ஆனா பொண்ணு கிட்ட இத பத்தி எதுவும் சொல்லல ."

பொண்ணு அப்பாவ பாக்க வருவாளா ?

"இவன் பேர்ல நீங்க எதுக்கு பணம் போடுறீங்க ?அத எனக்கு எடுத்து கொடுங்க .நா காலேஜ் பீஸ் கட்டறதுக்கு வேணும்னு சண்டை போடுறா .குடிகாரனா இருக்கான் .என் அப்பான்னு இவன எப்படி சொல்றது ?என் கல்யாணத்துல என் அப்பான்னு நிப்பாட்ட முடியுமானு  கேக்கறா .காலம் ரொம்ப மாறிப்போச்சு டாக்டர் "