போன வாரத்துல ஒரு ஓலா ஓட்டுநர் சொன்னார் மூணாம் தேதி வண்டி கிடைக்காது மேடம் -நாங்க ஸ்ட்ரைக்னு .எதுக்கு ஸ்ட்ரைக்னு கேட்டப்ப "கவர்ன்மெண்டுல ஒரு நாளைக்கு எட்டு மணிநேரம் தான் ஓட்டணும்னு சட்டம் போடுறாங்க "-
ரொம்ப நேரம் ஓட்டுறது உங்களுக்கே நல்லதில்ல தானே ?
"அப்ப ரேட்டை ஏத்திக்கொடுக்கணும் மேடம் -ஏத்தாம எட்டுமணிநேரம் ஓட்டுனா எதுக்குமே கட்டுப்படியாகாது ."
ஒரு ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி இப்படி தான் ஸ்ட்ரைக்னு சொல்லி பெருசா எடுபடல .ஆனா இந்த தடவ பரவலா இருந்தது போல .நிறைய வண்டிகள் இருந்த மாதிரி தெரியல .
இன்னைக்கு ஒரு கேப்ல வந்தேன் .உங்க ஸ்ட்ரைக் என்னாச்சுன்னு விசாரிச்சேன் ."பெருசா பண்ணிட்டோம் மேடம் -Joint Commissioner நேர்ல வந்து பத்து நாள்ல G.O வாங்கி தரேன்னு சொல்லிட்டு போயிருக்கார் .இல்லைனா பொங்கலுக்கு அப்புறம் பெரிய ஸ்ட்ரைக்கா பண்ணுவோம் .
நேத்து ராத்திரி பன்னெண்டு மணியிலேருந்து வண்டி ஓட்டுறேன் .134 கிலோமீட்டர் ஒட்டியிருக்கேன் .ஆனா பணம் என்னமோ 1400 ரூவா தான் (ஒரு ஸ்க்ரீன் ஷாட்டை காட்டினார் ).இது எப்படி கட்டுப்படியாகும் .இதுல ஓலாவுக்கு 30% கமிஷன் போகுது .க்ரூப் வண்டி விட்டு அவங்களுக்கு நல்ல ட்ரிப்பை போட்டுறாங்க .கஸ்டமர் ட்ரைவர் வரலன்னு ட்ரிப்ப கேன்சல் பண்ணிட்டா (driver denied duty ) 250 ரூவா பிடிச்சிருவாங்க .ரேட்டிங் போடலைன்னா ட்ரிப் கொடுக்க மாட்டாங்க .டீசல் விலை ,வண்டி EMI இல்லை வாடகை எல்லாத்துக்கும் எப்படி கட்டுப்படியாகும் ?
இதுல இவங்களுக்கு இங்க பிசினஸ் பண்ண லைசென்ஸ் இல்லையாம் .ஒரு லட்சம் கிடைக்குது அம்பதாயிரம் கிடைக்குதுனு ஊர்ல நிலத்தை எல்லாம் வித்து கொண்டு வந்து வண்டி ஓட்டுறாங்க .வேற வழியில்லாம இவங்க சொல்றபடி ஓட்டுறாங்க .காசை வேற இவங்க அக்கவுண்ட்ல வாங்கிட்டு பொறுமையா transfer பண்றாங்க .
நாங்க என்ன சொல்றோம்ன்னா,இன்சென்டிவ் (incentive ) வேண்டாம் .ரேட் நியாயமா கொடுக்கணும் .இந்த share ,pool எல்லாம் மாத்தணும் .அப்புறம் payment நாங்க choose பண்ற மாதிரி வைக்கணும் .
ஏன் மேடம் ,எவனோ ஒரு வெளிநாட்டுக்காரன் இங்க வந்து காசு சம்பாதிக்கிறதுக்கு ,நம்ம கவர்ன்மெண்ட்டே இந்த கமிஷனை எடுத்துக்கிட்டு ஏன் இத நடத்தக்கூடாது ?"