திமுக மாநில சுயாட்சி மாநாட்டை அறிவிச்சப்ப சந்தோஷமா இருந்தது .சரியான நேரத்துல சரியான அறிவிப்புனு .இதன் ஏற்பாடுகள் நடக்கும் போதே கலைஞர் காலமானார் .அதற்கான தொடர் நிகழ்வுகள் எல்லாம் ஏற்புடையதே .ஆனால் அத காரணம் காட்டி இந்த மாநாட்டை அஞ்சலி நிகழ்வா மாத்தினது ஏற்க முடியாதது .அதோட இன்னும் மோசம் அதுக்கு பாஜக சார்பில அமித் ஷாவ அழைச்சது .தமிழிசையை மட்டும் அழைச்சிருந்தா கூட பரவாயில்ல.
நீட் ,ஜிஎஸ்டி,நிதி ஒதுக்கீட்டில பாரபட்சம் அது இதுனு போய்ட்டிருக்கப்ப இந்த மாநில சுயாட்சி மாநாடு ரொம்ப முக்கியமானதாகுது .அதோட சேர்த்து ஒரு நிகழ்வா கலைஞர் அஞ்சலியை நடத்தியிருக்கலாம் .இல்ல தனியா ஒரு பெரிய நிகழ்வா நடத்தியிருக்கலாம் .மாநில சுயாட்சி மாநாடே கலைஞருக்கு பெரிய அஞ்சலி தான் .அத விட்டுட்டு....
யாரோ ஸ்டாலினுக்கு தப்புத்தப்பா அறிவுரை சொல்றாங்க போல (இந்த முடிவெல்லாம் அவரே எடுத்திருந்தா இன்னும் மோசம் ).
மொதல்ல அந்த போட்டி சட்டசபை -அதுவும் தூத்துக்குடி துப்பாக்கி சூடு விவாதத்துக்கு வந்தப்ப .இந்த யோசனை சொன்னவங்கள சத்தமில்லாம கட்சிய விட்டு நீக்கியிருக்கணும் .முக்கியமான எதிர்க்கட்சி அந்த மாதிரியான நிகழ்வு நேரத்துல செய்யற வேலையா இது ?
ரெண்டாவது உதயநிதியை முன்னிலைப்படுத்துறது .தேவையே இல்லாத அவசரம் .
அப்புறம் இந்த வாஜ்பாயி விஷயம் .டெல்லிக்கு போய் அஞ்சலி செலுத்துனதோட நிப்பாட்டிருக்கலாம் .சென்னையில கட்சி அலுவலகத்துக்கு போய் அஸ்தி கலசத்துக்கு அஞ்சலி எல்லாம் பாஜக கட்சிக்காரங்க அப்புறம் அவங்க அடிமைகள் இல்ல டெல்லிக்கு போகாதவங்க மட்டுமே செய்ய வேண்டியது .வாஜ்பாயி என்ன காந்தியா ?
ஆர்கே நகர்ல டிடிவி என்ன பண்ணிருந்தாலும் அவர் ஜெயிச்சா இந்த எடப்பாடி ஆட்சி கவிழும்ங்கிற நம்பிக்கையை அவரால ஏற்படுத்த முடிஞ்சதும் அவர் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணம் .அத திமுகவால் ஏற்படுத்த முடியாமல் போனது நிதர்சனம் .
மெரினால கலைஞருக்கு போராடி இடம் பெற்றது ஸ்டாலினின் தலைமையில் ஒரு முக்கிய மைல்கல் .அத அப்படியே தலைமை, மாநில சுயாட்சின்னு படிப்படியா முன்னால போகாம ,இப்படி ஒரு முழம் சறுக்கல் .
மொத்த ஊடகமும் பாஜக அதிமுக கைல ,எதையானாலும் பெருசு படுத்த காத்திருக்கப்ப அவங்களுக்கு கூட்டணி ,2ஜி ,தேர்தலுக்கு அப்புறம் கூட்டணினு அவல் கொடுத்திருக்காங்க .இதுல சாமி வேற அமித் ஷா இந்த அழைப்பது ஏற்காதது மகிழ்ச்சின்னு ட்வீட் பண்றாரு .....
அரசியல் நாகரிகம்னு இதுக்கு காரணம் சொல்றதெல்லாம் அல்வா கொடுக்கற வேலை தான் .....

No comments:
Post a Comment