Friday, 28 September 2018

கருப்பும் இல்லை வெள்ளையும் இல்லை

என் கிழவன் ஒரு வெள்ளை கிழவன்
என் அம்மை கருப்பு
என் வெள்ளை கிழவனை
நான் சபித்திருந்தால்
சாபங்களை  திரும்ப பெறுகிறேன்
என் கருப்பு அம்மையை நான் சபித்திருந்தால்
நரகத்திற்கு போகட்டும்  என்று நினைத்திருந்தால்
அந்த கெட்ட எண்ணத்துக்கு வருந்துகிறேன் 
அவள் நன்றாக இருக்கட்டும் .
என் கிழவன் ஒரு பங்களாவில் செத்து  போனான்
என் அம்மை குடிசையில் ..
கருப்பும்  இல்லை வெள்ளையும் இல்லை
நான் சாகப்போவது எங்கேயோ !




Cross -
Poem by Langston Hughes




My old man's a white old man
And my old mother's black.
If ever I cursed my white old man
I take my curses back.
If ever I cursed my black old mother
And wished she were in hell,
I'm sorry for that evil wish
And now I wish her well
My old man died in a fine big house.
My ma died in a shack.
I wonder where I'm going to die,
Being neither white nor black?

Thursday, 27 September 2018

கலைஞருக்கு மருத்துவர்களின் புகழ் வணக்கம்

அழைப்பிதழ் கிடைத்தபடியால் இந்த நிகழ்வில் நேற்று  பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது .பேசிய மருத்துவர்கள் அனைவரும் கலைஞருக்கு பல வருடமாக சிகிச்சை அளித்து கொண்டிருந்தவர்கள் .அதனால் அவருடன் நெருங்கி பழகும் வாய்ப்பை பெற்றவர்கள் .

நெஞ்சில் நின்றவை

1. மரு .கோபால் என்பவர் தொடர்ந்து   கலைஞரின் உடல்நலத்தை பராமரித்திருக்கிறார் .இவர் ஆலோசனை படி வேறு மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்திருக்கிறார்கள் .
2.எல்லோரும் கலைஞரின் மகள் செல்வி தன் தந்தையை கவனித்து கொண்டதை வியந்து பாராட்டினார்கள் .ஒருத்தர் உங்களை போல் எனக்கு ஒரு மகள் வேண்டும் என்று சொன்னார் .
3. கலைஞர் பல விதமான உடல்நலக்  குறைவுகளால் பல நேரங்களில் அவதிப்பட்டிருக்கிறார் .ஆனால் இவற்றில் பலவற்றை நாம் அறிந்ததில்லை .இவற்றோடு கூடும்   அவர் ஓய்வறியாமல் உழைத்தார் என்பது பிரமிக்கத்தக்க  விஷயம் .சின்ன விஷயங்களுக்கு கூட நாம் ஐயோ அம்மா என்று சோர்வடைந்து போகிறோம் .
4.ஒரு நேரத்தில் ஒரு பிரச்சனைக்கு அமெரிக்க மருத்துவர் வந்த போது ,"not  necessary  "என்று மறுத்து விட்டாராம் .
5.பிறவியிலேயே செவித்திறன் குறைபாடுள்ளோருக்கு செய்யப்படும் "cochlear implant " அறுவை சிகிச்சையை  அவர் இலவசமாக செய்ய ஒப்புக்கொண்டதையும், அதனால் 2000 குழந்தைகள் பயன் அடைந்ததையும்
UNஇல் சொன்ன போது "standing ovation "கிடைத்ததாக மரு.மோகன் காமேஸ்வரன்  பெருமையாக சொன்னார் .
 6.மருத்துவர்கள் பலருக்கு சரளமாக தமிழ் பேச முடியவில்லை .

எல்லாவற்றையும் விட இந்த நிகழ்வின் முக்கிய படிப்பினை  இதுதான் .
கலைஞர் தன் உடல்நலத்தின்  மீது பிரத்தியேக அக்கறை எடுத்திருக்கிறார்.பல அரசியல் தலைவர்கள் போல் பணி சுமையை காரணம்  காட்டி அதை உதாசீனம் செய்யவில்லை .மருத்துவர்களின் அறிவுரையை கச்சிதமாக பின்பற்றியிருக்கிறார் .சின்ன விஷயமாக  இருந்தாலும்  அலட்சியபடுத்தாமல் எந்த நேரமாக இருந்தாலும் மருத்துவர்களை தொடர்பு கொண்டிருக்கிறார் .உடல் பயிற்சி நல்லது என்று சொல்லப்பட்டதால் மழையிலும் குடை பிடித்துக்கொண்டு வாக்கிங் போனாராம்  .

 செய்த எல்லாவற்றையும் திருந்த செய்தது போல ,இதையும் தன் கடமைகள் ஒன்றென அவர் கருதியிருக்கக் கூடும் .அதுவே இத்தனை ஆண்டுகள் அவரை நம்மோடு வைத்திருந்தது என்பது மிகையல்ல .