அம்மாவுடன் வரும் ஒரு சிறுமி .சில வருடம் வரல .ஒரு நாள் அவள் மாமா கூட்டிட்டு வந்தார் .அவருக்கு இருபத்தைந்து வயதுக்குள்ள இருக்கும் .நோய் அதிகமாகி மூச்சு விடவே சிரமப்பட்டுட்டிருந்தா .சத்தம் போட்டேன்
"எங்கக்கா இறந்து போய்ட்டாங்க "
"அதனால இவளை ஏன் கூட்டிட்டு வரல"ன்னு கோபப்பட்டேன்."கண்டிப்பா அட்மிட் தான் பண்ணனும் .இப்ப ஒண்ணும் சொல்றதுக்கில்ல"னு சொல்லிட்டேன் .
அவளோ பத்து வயசு இருக்கும் .அட்மிட் ஆகவே மாட்டேன்னு அடம் பிடிக்கிறா .வீட்டுக்கு அனுப்புங்கன்னு அழுகை வேற .எதையோ சொல்லி ஏமாத்துற வயசும் இல்ல .கொஞ்ச நேரத்துல வீட்டுக்கு அனுப்பிடுறோம்னு கஷ்டப்பட்டு ரூம்க்கு கூட்டிட்டு போறோம் .மொத்த மருத்துவமனையும் அவ கிட்ட கெஞ்சிருக்கோம் .எப்படியோ சமாதானமாகி இருந்துட்டா .உடம்பு ஒத்துழைக்கலன்னு புரிஞ்சுதோ என்னமோ .நுரையீரல் இருதயம்ன்னு ஏகப்பட்ட தொற்று . பத்து நாள்ல வீட்டுக்கு போயே ஆகணும்ன்னு ஒரே அழுகை .உடல்நிலை இப்ப கொஞ்சம் தேறியிருந்தது.ஆனா அழுதே சிக் ஆகிருவா போலிருந்தது .இப்படியே அழுகை அடம் கெஞ்சல்னு ஒரு மூணு நாலு அட்மிஷன் .ரெண்டு வருஷத்துக்கு முன்னால இன்ஜினியரிங் சேர்ந்தப்ப "என்னை bless பண்ணுங்க aunty "னு ஆசிர்வாதம் வாங்கினப்ப பிரமிப்பா இருந்தது .
மாமா திருமணமாகி நல்ல வேலைல இருக்கார் .அவர் மனைவியும் அவள அத்தனை அன்பா பாத்துக்குறாங்க .போன வாரம் மாமா கூட செக்கப் வந்திருந்தா ."நா மொதல்ல கூட்டிட்டு வந்தப்ப எங்கக்காக்கோ இவளுக்கோ எச்.ஐ.வி இருக்கதே எனக்கு தெரியாது .எங்கம்மா, அந்த ஆஸ்பத்திரிக்கு தான்
அக்கா போவான்னு சொன்னாங்க .அதனால கூட்டிட்டு வந்தேன் .நீங்க சொன்னத கேட்டதும் ஷாக் ஆகிருச்சு .அதோட இவளை வேற அட்மிட் பண்ணனும்ன்னு சொன்னதும் எனக்கு ஒண்ணுமே புரியல .அப்புறம் கூட
அவ்வளவு கோபம் தான் வந்தது .சீ ..நம்ம அக்காவும் இறந்துட்டாங்க ,இவளுக்கும் இந்த வியாதியானு .சொன்னா நம்ப மாட்டீங்க ,போற வழியில ஆட்டோலேருந்து தள்ளி விட்டுட்டேன் .நல்ல வேளை .இப்ப நெனச்சா கூட மனசு கஷ்டமாயிருக்கும் ,இப்படி முட்டாள்தனம் செய்ய போனோமேனு ."