Thursday, 14 May 2020

வீடு நோக்கி ஓடுகின்ற நம்மையே ....

"வீடு நோக்கி ஓடுகின்ற நம்மையே,
நாடி நிற்குதே அனேக நன்மையே ,உண்மையே "னு

ஆரம்பிக்கிற பட்டுக்கோட்டை பாட்டு  .ராணுவத்திலேருந்து  வீட்டுக்கு திரும்பும் சிவாஜியும் அவர் தோழர்களும் நம்பிக்கையா பாடிக்கிட்டே வருவாங்க .அப்புறம் இதே பாட்டோட சோக வெர்ஷன் ,"வீடு நோக்கி ஓடி வந்த நம்மையே"னு போகும் . ஏனோ இன்னைக்கு அந்த வீடியோ பார்த்ததிலிருந்து இந்த பாட்டு ஞாபகத்திலேயே இருக்கு .எத்தனை பேர் எத்தனை மணி நேரம்ன்னு  குழந்தைங்க ,பாத்திரம் ,வாத்து ,நாய்னு  கூட சுமந்துட்டு நடந்து போய்க்கிட்டே இருக்காங்க .வீடுங்கறது என்ன .A house is made of bricks but a  home is made of hearts னு ஒரு  பழமொழி இருக்கு .எங்கிருந்தோ எங்கேயோ பிழைக்க ஏன் வராங்க ?ஒரு நல்ல வாழக்கை அமையும்னு தானே ?இல்ல சம்பாதிச்சு திரும்ப போய் ஒரு வீடு இல்ல  ஏதோ ஒரு தொழில் பண்ணி பிழைச்சுக்கலாம்ன்னு தானே ?கூட்டிட்டு வரவங்களுக்கும் இவங்க வசதிக்கு தானே கூட்டிட்டு வராங்க ? ஒரு அரசு என்ன செஞ்சிருக்கணும் ?இதுல யோசிக்க பெருசா எதுவுமே இல்லையே ?ஒண்ணு அவங்கள இங்கேயே நிலைமை  சரியாகற வரைக்கும் இருங்க அதுவரைக்கும் நாங்க பாத்துக்கறோம்னு சொல்லணும் இல்ல ஊருக்கு போகணும்ன்னு ஆசைப்பட்டீங்கனா அதுக்கான ஏற்பாடுகளை செஞ்சு தரோம்ன்னு பண்ணியிருக்கணும் . அது விட்டுட்டு ரயில் விடுறோம் விடல,விட்டப்புறம் இங்க வேலை கெட்டுப்போகும்னு போக விடமாட்டோம்ங்கறதெல்லாம் என்ன நியாயம் ?

ஊருக்கே போய்ட்டா எப்படியாவது பிழைச்சுக்கலாம்ன்னு  தானே எப்படியோ கிளம்பி போறாங்க ?அங்கேயும் போய் உள்ள விடுறதிலேருந்து எத்தனை சிக்கல் .40 km லேருந்து 1000 kmலாம் என்ன தைரியத்துல நடக்க ஆரம்பிக்கறாங்க ?அந்த குழந்தைங்க என்ன பண்ணும் ?வழியில தண்ணி சாப்பாடெல்லாம் என்ன பண்ணுவாங்க ?யார் தருவா ?தைப்பூசத்துக்கு பழனிக்கு பாதயாத்திரைக்கு போறவங்களுக்கு வழியெல்லாம் பந்தல் வச்சு சாப்பாடும்  தண்ணியும் கொடுத்துகிட்டே இருப்பாங்க .ஊரே அடைஞ்சு கிடக்குதே யார் வருவாங்க  இவங்களுக்கு சாப்பாடோ தண்ணியோ தர ?டாய்லெட் வசதிகளுக்கு எங்க போவாங்க ?இதை மொத்த அரசும் எப்படி கலங்காம வேடிக்கை மட்டுமே பாக்குது ?மனுஷங்கன்னா  அவ்வளவு இளப்பமா ?இவ்வளவு குரூரமா ஒரு அரசு இருக்க முடியுமா ?அப்ப இவங்க யாரோட குடிமக்கள் ?





எப்ப போய் சேர்வோம்ன்னு தெரியாது ,வழியில என்ன நடக்கும்னு தெரியாது .அந்த நாயையும் வாத்தையையும் இருந்த இடத்துல தூக்கிப்  போட்டுட்டு போயிருக்கலாம் .அதையும் சேர்த்து சுமந்துட்டு போக சொல்றது எது ?அது ஏன் ஒரு அரசுகிட்டயும் அதன் மக்களான நம்ம  கிட்டயும் இல்லாம போச்சு ....








4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

இந்த அரசு அனைத்து மக்களுக்கும் நல்லது செய்கிறது என்று வேறு ஒரு கோஷ்டி சொல்லிக் கொண்டிருக்கிறது... அவை இன்னும் வேதனை அதிகம் தருகிறது...

Avargal Unmaigal said...

இந்த படத்தையும் பதிவையும் பார்த்தது என் கண்களில் கண்ணீர்..... இதயம் உள்ள ஏழைகள் தங்களை சார்ந்த நாயையும் வாத்தையும் தூக்கி செல்கிறார்கள் ஆனால் பணம் படைத்த செல்வந்தர்களோ இதயமற்று இருக்கிறார்கள்....


வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் இப்படி ஆனதே

பூங்குழலி said...

திண்டுக்கல் தனபாலன்- இவங்க நல்லது செஞ்சிருக்காங்கன்னு நம்புறவங்க கிட்ட இருந்து விலகி இருக்க வேண்டியது தான்

பூங்குழலி said...

அரசு கவலையின்றி வேடிக்கை பார்க்கிறது