இன்று போலவே இருந்தது நேற்றும்
இன்றும் மாறாது , நாளையும் கூட
நேற்றில் இன்று
தான் புதிதென பாவித்து
ஜோடனை செய்தபடி இருந்தது
இன்றாகி
ஜோடனைகள் கலைத்த போது
நேற்றாகி இருந்தது இன்றும்
நேற்றைய நாளையும்
இன்றும்
நாளை வேறென
கட்டியம் சொல்லியபடி இருக்கிறது
நாளை விளங்கித்தான் போகும்
இது வெறும் நேற்றென
நேற்றும் இன்றும் நாளையும்
இன்றே என்றது இன்று
இன்றே என்றும் என்றால்
தினம் வேறொன்றாக
ஒப்பனைகள் எதற்கென
ஒப்பனைகள் எனக்கில்லை என
என் ஒப்பனைகள்
கலைத்தபடி கடந்து போனது
நாளையாக
